இந்தியன் 2 இசை வெளியீடு


ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்துள்ள இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஜூன் 1 ஆம் தேதி கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்த நிகழ்வில் கமல் , ஷங்கர் , ஸ்ருதி ஹாசன் , அனிருத் , ரகுல் ப்ரீத் , காஜல் அகர்வால் , பாபி சிம்ஹா , நாசர் , லோகேஷ் கனகராஜ் , நெல்சன் திலிப்குமார் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் கலந்துகொண்டார்கள்.


சிம்புவை காணாம் என்று கலாய்த்த நெட்டிசன்கள்


நிகழ்ச்சியில் நடிகர் சிலம்பரசன் கலந்துகொள்வார் என்று தகவல் வெளியாகிய நிலையில் நிகழ்ச்சித் தொடங்கிய சில மணி நேரங்கள் வரை சிம்பு வரவில்லை. ஒருபக்கம் விழாவில் சிம்பு பேசுவதை கேட்க ஆர்வமாக இருந்த ரசிகர்கள் ஏமாற்றமடைய மறுபக்கம் விழாவே முடியப்போகுது இன்னுமா சிம்பு வரல என்று நெட்டிசன்கள் மீம்களை பறக்கவிட தொடங்கனார்கள்.ஒருவழியாக  எல்லாரையும் வாயடைக்கச் செய்யும் படி என்ட்ரி கொடுத்தார் தக் லைஃப் நடிகர்.


தக் லைஃப் ஷூட்டில் இருந்து வந்த சிம்பு


தன்னை எப்படி எல்லாம் ட்ரோல் செய்வார்கள் என்று நன்றாக தெரிந்து வைத்த சிம்பு தனது பேச்சை இப்படி தொடங்கனார் " நான் லேட்டாக வந்தேன்னு நினைக்காதீங்க. எப்படியும் எல்லாரும் நான் லேட்டாக வந்தேன் என்று தான் சொல்வார்கள். நான் கமல் சாரின் தக் லைஃப் படத்தின் ஷூட்டில் இருந்து வருகிறேன். இந்தியன் எனக்கு ரொம்ப நெருக்கமான படம். கமர்ஷியல் படங்களுக்கு ஒரு வடிவத்தை செட் பண்ணதே அந்த படம்தான். கமல் சார் தான் எனக்கு ஆன் ஸ்கிரீன் குரு. கமல் சார் உடன் நடித்த அனுபவம் பற்றி நான் தக் லைஃப் மேடையில் கண்டிப்பாக பேசுவேன். கமல் சாருடன் நடிக்கும்போது மட்டும் எனக்குள் எதுவுமே தோனவில்லை. அவரை பார்த்துக் கொண்டு இருக்க மட்டும்தான் தோனும். கமல் சார் தான் உண்மையான பான் இந்தியா ஸ்டார். ஒரே நேரத்தில் இந்தியன் 2 , இந்தியன் 3 , கேம் சேஞ்சர் மூனு படம் எடுப்பது எல்லாம் சாதாரண விஷயம் இல்லை. ஷங்கர் சார் நிஜமாகவே கிரேட். இந்தியன் முதல் பாகத்தில் ரஹ்மான் ஒரு இசை பிரம்மாண்டமாக இருக்கும் அவருக்கு பிறகு இந்த படத்தை தைரியமாக எடுத்து பண்ண்யிருக்கிறார் அனிருத். கண்டிப்பாக நன்றாக செய்திருக்கிறார் என்று நம்புகிறேன்" என்று சிலம்பரசன் படக்குழுவை வாழ்த்தினார்.


நம்ம உடம்புதான் முக்கியம்


தொடர்ந்து பேசிய சிலம்பரசன் "எல்லாரும் சொல்றாங்க நான் ஏதோ ட்ரான்ஃபார்ம் ஆனேன்னு ஆனால் இது ஒரு ஸ்பிரிச்சுவலான விஷயம். நம்ம கூட இருக்க எல்லாரும் நம்மல விட்டுட்டு போய்டுவாங்க.நம்ம உடல் மட்டும்தான் நம்ம கூட இருக்கும். அதனால நம்ம அத ஒழுங்கா பாத்துக்கனும் எப்போவும் " என தனது குட்டி மெசேஜின் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.