நடிகர் சிலம்பரசன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் பொறுமையை சோதித்த ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படம் வெளியாகி இன்றோடு 6 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
சிலம்பரசனின் சோதனை காலம்
தமிழ் சினிமாவில் திறமை இருந்தும் பல பிரச்சினைகளில் தானாகவே சிக்கிக்கொள்ளும் நடிகர்களில் ஒருவர் சிலம்பரசன். நடிப்பு, டான்ஸ், இயக்கம், பாடலாசிரியர், பாடகர் என பன்முக திறமைக் கொண்ட அவருக்கு 2015 ஆம் ஆண்டில் இருந்தே சோதனை காலம் தொடங்கியது எனலாம். கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் ஷூட்டிங்கிற்கு லேட்டாக வருகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவருக்கு ரெட் கார்டு போடும் அளவுக்கு இழுத்துச் சென்றது அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம்.
அன்பானவன் அசராதவன் அடங்காதவன்
2017ஆம் ஆண்டு ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்தை இயக்கிய படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன். இந்த படத்தில் 3 வேடங்களில் சிம்பு நடித்திருந்தார், மேலும் ஸ்ரேயா, தமன்னா, மகத் ராகவேந்திரா, விடிவி கணேஷ் என பலரும் இணைந்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இப்படம் சிம்புவின் சினிமா கேரியரில் ‘மிக மோசமான படம்’ என்ற பெயரை பெற்றுக் கொடுத்தது.
ரசிகர்களின் கோபத்தை சம்பாதித்த சிம்பு
மதுரை கூலிப்படையைச் சேர்ந்த ரவுடியான சிம்பு (மதுரை மைக்கேல்) ஸ்ரேயாவின் காதலுக்காக ரவுடித் தனத்தை விட்டுவிட நினைக்கும் நேரத்தில், கைது செய்யப்படுகிறார். பின்னர் ஜெயிலில் இருந்து தப்பித்து ஸ்ரேயாவை கரம் பிடிப்பார் என நினைத்தால் அது தான் இல்லை. ஸ்ரேயாவுக்காக தன் காதலை விட்டுக்கொடுக்கிறார்.
இதன்பின்னர் துபாயில் பெரிய தாதாவாகி, பின்னர் சென்னையில் ஒரு தாத்தாவாகி (அஸ்வின் தாத்தா) 20 வயது பெண் தமன்னா மீது காதல் கொள்கிறார். ஆனால் அவரோ இளைஞர் சிம்புவை (திக்கு சிவா) காதலிப்பதாகச் சொல்கிறார். இதனால் டென்ஷனாகும் தாத்தா சிம்பு தமன்னாவை பழிவாங்க துடிப்பதை, ரசிகர்களை பலி கொடுக்கும் வகையில் மெகா அறுவையான படைப்பை வழங்கியிருந்தார்.
முதல் காட்சி ரத்து செய்யப்பட்டது என்ற போதே இந்த படத்தின் ரிசல்ட் தெரிந்திருக்கும். சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டதாகவே தியேட்டருக்கு சென்ற ரசிகர்கள் நினைத்துக் கொண்டனர். யுவன் ஷங்கர் ராஜா தன் பங்குங்கு வேலையை செவ்வேன செய்திருந்தார்.
சிக்கிய சிம்பு.. தலையில் துண்டை போட்ட தயாரிப்பாளர்
இந்த படம் தியேட்டரில் 2 பாகங்களாக வெளியாவதாக இருந்தது. ஆனால் முதல் பாகமே படுதோல்வி அடைந்ததால் சிம்பு ரசிகர்கள் நொந்து போயினர். இயக்குனர் ஆதிக் மற்றும் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் இருவரும் செய்தியாளர்களை சந்தித்து சிம்பு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சொன்னர். சிம்பு பல மாற்றங்களை செய்தார். பெரிய நட்சத்திரத்தை ஒப்பந்தம் செய்துவிட்டதால் வேறு வழியின்றியே அவர் சொன்ன மாதிரி படமெடுத்தேன். அவர் தான் 2 பாகமாக எடுக்க வேண்டும் என சொன்னார் என புகார் கொடுத்து சிம்புவுக்கு ரெட் கார்டு போடும் அளவுக்கு சென்றது பிரச்சினை.