தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிலம்பரசன். இவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் அரசன். இந்த படத்தை பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்க உள்ளார். இந்த படத்தின் போஸ்டர் இணையத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
நாளை ப்ரமோ:
இந்த சூழலில், இந்த படத்தின் ப்ரமோ நாளை வெளியாக உள்ளது. இது தமிழ்நாட்டில் சில குறிப்பிட்ட திரையரங்குகளில் நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளது. இதையடுத்து, படத்தின் நாயகன் சிலம்பரசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
சத்தியமா சொல்றேன் வொர்த்:
எனது அன்பு ரத்தங்களே.. வெற்றிமாறன் சாரின் அரசன் படத்தின் ப்ரமோ தியேட்டர் வெர்சனை இசையுடன் சேர்த்து இப்போதுதான் பார்த்தேன். நான் சொல்றேன், டைம் கிடைச்சா தியேட்டர்ல பாத்துடுங்க,. தியேட்டர் அனுபவத்தை மிஸ் செய்ய வேண்டாம். வொர்த்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
அரசன் ப்ரமோ:
சிலம்பரசன் - வெற்றிமாறன் கூட்டணி ஏற்கனவே வடசென்னை படத்திலே ஒன்றாக இணைய வேண்டியவர்கள் ஆவார்கள். ஆனால், அந்த படத்தில் நடிகர் சிம்புவிற்கு பதில் தனுஷ் நடித்தார். தற்போது உருவாகும் அரசன் படத்தில் தனுஷின் வடசென்னை படத்தில் இடம்பிடித்த கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
அரசன் படத்தை பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி தாணு உருவாக்கியுள்ளார். தியேட்டர்களில் இந்த படத்தின் ப்ரமோ மாலை 6.02 மணிக்கு வருகிறது. யூ டியப்களில் வரும் 17ம் தேதி காலை 10.07 மணிக்கு வெளியாக உள்ளது. இந்த படத்தில் பணியாற்ற உள்ள மற்ற கலைஞர்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
தொடர்ந்து பிசியில் சிம்பு:
இந்த படத்தின் கதைக்களமும் வட சென்னையில் நடப்பது போல உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது. சிலம்பரசன் தனது உடல் எடையை குறைத்த பிறகு தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தற்போது சிம்பு இந்த படம் மட்டுமின்றி இன்னும் சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
வெற்றிமாறன் சூர்யாவை வைத்து இயக்கவிருந்த வாடிவாசல் படப்பிடிப்பு தொடர்ந்து ஒத்திப்போவதால் அரசன் படம் தொடங்கப்பட்டுள்ளது.