எஸ்.வி சேகர்

திரைப்பட நடிகர் மற்றும் அரசியல்வாதியான எஸ்.வி சேகர் தனது எக்ஸ் பக்க பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தனது எக்ஸ் பக்கத்தில் என்னை ஒரு படத்தில் புக் செய்த பிறகு, நானாக விலகினாலோ, விலக்கப்பட்டாலோ அந்த படம் ரிலீசாகி தியேட்டருக்கு வராது. வந்தாலும் ஓடாது. இது வரலாறு. வரலாறு தொடர்கிரது." என பதிவிட்டுள்ளார். மாதவன் , சித்தார்த் , நயன்தாரா நடித்து சமீபத்தில் வெளியான டெஸ்ட் படத்தின் போஸ்டரை பதிவிட்டு அவர் இந்த பதிவை பதிவிட்டுள்ளார். எஸ்.வி.சேகர் டெஸ்ட் படத்தை ஏன் விமர்சிக்கிறார் என்கிற கேள்வி எழுந்தது. 

எஸ்.வி சேகருடன் நடிக்க மறுத்த சித்தார்த்

தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்கத்தில் சித்தார்த் , மாதவன் , நயன்தாரா ஆகியோர் நடித்துள்ள படம் டெஸ்ட். கிரிக்கெட் சூதாட்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகியது. நடிகர்கள் சிறப்பாக நடித்திருந்தாலும் படத்தின் திரைக்கதை பெரியளவில் ரசிகர்களிடம் கவனமீர்க்கவில்லை. டெஸ்ட் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. 

இப்படத்தில் சித்தார்த் கிரிக்கெட் வீரராக நடித்துள்ளார். அவரது தந்தையாக நடிக்க இயக்குநர் சசிகாந்த் எஸ்.வி.சேகருக்கு கதை சொல்லியிருக்கிறார். கதை பிடித்து அவரும் ஓக்கே சொல்லியிருக்கிறார். பின் சில நாட்களுக்குப் பின் இப்படத்தில் சித்தார்த் எஸ்.வி. சேகருடன் இணைந்து நடிக்க மறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார். எஸ்.வி.சேகர் மோடி ஆதரவாளர் சித்தார்த் மோடி எதிர்பாளர் . இப்படத்தில் இருவரும் இணைந்து நடித்தால் ரசிகர்கள் தன்னை ட்ரோல் செய்வார்கள் என சித்தார்த் பயப்படுகிறார். இதனால் டெஸ்ட் படத்தில் எஸ்.வி.சேகருடன் இணைந்து நடிக்க பயப்படுகிறார் என சசிகாந்த் கூறியதாக நேர்காணல் ஒன்றில் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார் . தற்போது படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வரும் நிலையில் எஸ்.வி. சேகரின் பதிவு டெஸ்ட் படத்திற்கு கூடுதல் கவனம் சேர்த்துள்ளது.