ஷிவராஜ்குமார்
கன்னட திரையுலகின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் ஷிவராஜ்குமார். ரசிகர்களால் இவர் ஷிவாண்ணா என செல்லமாக அழைக்கப்படுகிறார். ஷிவாண்ணாவிற்கு சிறுநீரக பையில் புற்று நோய் அறிகுறிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவர் அமெரிக்காவில் சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். சிறுநீரக பையை தற்போது நீக்கி. அதற்கு மாற்றாக ஷிவாண்ணாவின் குடலில் இருந்து உருவாக்கப்பட்ட மற்றொரு சிறுநீரக பை பொருத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஃப்ளோரிடாவில் மியாமி புற்று நோய் சிகிச்சை மையத்தில் கடந்த ஜனவரி 24 ஆம் தேதி அவருக்கு சிகிச்சை நடைபெற்றது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஷிவாண்ணா பலவேறு தகவல்களை பகிர்ந்துகொண்டார். அப்போது கமல் பற்றி அவர் பேசியது கவனமீர்த்துள்ளது
கமல் பற்றி ஷிவராஜ் குமார்
" நான் மருத்துவமனையில் இருந்தபோது கமல்ஹாசன் சார் எனக்கு அழைத்து பேசியிருந்தார். நான் நலமாக இருப்பதை கேட்டு அவரது கண் கலங்கியதாக சொன்னார். கமல்ஹாசன் என்றால் அழகு. நான் பெண்ணாக இருந்திருந்தால் நிச்சயமாக அவரை கல்யாணம் பண்ணியிருப்பேன். நான் பெண்ணாக பிறந்திருந்தால் உங்களை கரெக்ட் பண்ணியிருப்பேன் நான் இதை அவரிடமே சொல்லியிருக்கேன். ஒருமுறை கமல் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது நான் அவரை கட்டிபிடித்துக் கொண்டேன். அடுத்த மூன்று நாட்களுக்கு நான் குளிக்கவே இல்லை. அவருடைய வாசம் என்மீது இருக்க வேண்டும் என்று நினைத்தேன். கமல் படம் ரிலீஸானால் மொத்த குடும்பத்திற்கு சேர்த்து முதல் நாள் முதல் ஷோ டிக்கெட் போடச் சொல்வேன். கமலுக்கு நான் அப்படி ஒரு ரசிகன். " என ஷிவராஜ் குமார் தெரிவித்துள்ளார்
ஜெயிலர் 2
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ஜெயிலர் 2 படத்தில் ஷிவராஜ் குமார் நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் முன்பாக கேரளாவில் தொடங்கியது. ரஜினி ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது . அனிருத் இசையமைக்கிறார்