Shah Rukh Khan: தன் மனைவிக்கு சிஸெரியன் நடக்கையில் எஞ்சாய் செய்த ஷாருக் கான்! அப்படி என்ன?

தனது மனைவிக்கு அறுவை சிகிச்சை நடந்து குழந்தையை வயிற்றில் இருந்து வெளியே எடுத்த தருணத்தை தான் ரொம்ப ரசித்ததாக நடிகர் ஷாருக் கான் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

ஷாருக் கான்

பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாருக் கான். தற்போது இவருக்கு 58 வயதாகிறது. ஆனால் சினிமாவில் ரொமாண்டிக் நடிகராக இருந்த காலம் முதல் தற்போது மாஸ் நடிகராக இருப்பது வரை அவர் ஒரே இயல்போடு தான் இருந்து வருகிறார். தனது தோற்றத்தின் மேல் அசாத்தியமான தன்னம்பிக்கை, எல்லா கேள்விகளுக்கும் பட்டென்று பதில் கொடுத்து எதிரில் இருப்பவரின் வாயை அடைப்பது எல்லாம் அவருக்கு கை வந்த கலை. குறிப்பாக பெண்களிடம்  ஷாருக் கான் ரொமாண்டிக்காக பேசி பின் தானே பல்ப் வாங்குவது எல்லாம் கிளாசிக். 

Continues below advertisement

ஆனால் நாம் பார்ப்பதைவிட ஷாருக் கான் ரொம்ப வித்தியாசமான ரசனைக் கொண்டவர். ஷாருக் கான் கெளரியை கடந்த 1991 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு 1997 ஆம் ஆண்டு மூத்த மகனான ஆர்யன் கான் பிறந்தார். மருத்துவமனையில் கெளரிக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருந்த போது பக்கத்தில் இருந்து ஷாருக் கான் என்ன செய்துகொண்டிருந்தார் என்று கேட்டால் பலர் ஆச்சரியல் அடையலாம்.   தனது மூத்த மகன் பிறந்த தருணம் பற்றி ஷாருக் கான் பழைய நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

படத்தில் வருவது போல் இல்லை

” பிரசவத்தின் போது ஒரு பெண் எப்படி ரியாக்ட் செய்வார் என்று எனக்கு தெரியாது. அந்த தருணத்தில் கணவன் மனைவியோடு சேர்ந்து சேர்ந்து மூச்சுவிட வேண்டும் என்று நான் கேள்வி பட்டிருக்கிறேன். ஆனால் அவள் மூச்சே விடவில்லை. படத்தில் காட்டுவது போல் இல்லாமல் என் மனைவி வித்தியாசமாக கத்திக்கொண்டு இருந்தார். ” என்று கூறியுள்ளார்

” குழந்தையைப் பார்த்த ஆர்வத்தில் ஷாருக் கான் வயிற்றில் இருந்து குழந்தையை இழுத்து ஃபோட்டோ எடுக்கத் தொடங்கியதாகவும் மருத்துவர்களுக்கு இதனால் சிரமம் ஏற்பட்டதாகவும் ஷாருக் கானின் மனைவி கெளரி தெரிவித்துள்ளார். 

” என் மனைவிக்கு அறுவை சிகிச்சை நடந்ததை நான் பார்க்க வேண்டாம் என்று சொன்னார். ஆனால் நான் அதை பார்த்தேன், எனக்கு  அதை பார்க்க அருவருப்பாக இல்லை. நம் உடலுக்குள் இருக்கும் இயற்கையான அமைப்பையும் சிவப்பு , நீலம் , மஞ்சள் நிறத்தில் இருந்த கொழுப்பு இதை எல்லாம் பார்க்க எனக்கு பிடித்திருந்தது. இதை எல்லாம் நாம் வெளி உலகத்தில் பார்க்க முடியாது. “ என்று ஷாருக் கான் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். 

Continues below advertisement
Sponsored Links by Taboola