71 ஆவது தேசிய விருதுகள்
2023 ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான தேசிய விருதுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டன. இப்படியான நிலையில் இன்று 23 செப்டம்பர் ஆம் தேதி டெல்லியில் 71 ஆவது தேசிய விருது வழங்கும் நிகழ்ச்சி விக்யான் பவனில் இந்திய குடியரசு தலைவர் திரெளபதி முர்மு கையால் தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த ஒலிப்பதிவிற்காக அனிமல் , சிறந்த தெலுங்கு படமாக பாலையாவின் பகவந்த் கேசரி , சிறந்த தமிழ் படத்திற்காக ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கிய பார்க்கிங் ஆகிய படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
33 ஆண்டில் முதல் தேசிய விருது வாங்கிய ஷாருக்கான்
சிறந்த நடிகருக்கான தேசிய விருது இந்த முறை 12th ஃபெயில் படத்திற்காக விக்ராந்த் மாஸ்ஸே மற்றும் ஜவான் படத்திற்காக நடிகர் ஷாருக் கான் ஆகிய இருவருக்கும் பகிர்ந்தளிக்கப் பட்டது. ஷாருக் கானுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது குறித்து பல விதமான விமர்சனங்கள் எழுந்தன என்றாலும் ரசிகர்கள் இந்த விருதுக்கு ஷாருக் கான் முழுக்க முழுக்க தகுதியானவர் என்று தங்கள் ஆதரவைத் தெரிவித்தார்கள். குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கையால் ஷாருக் கான் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றுக்கொண்டார். கடந்த 33 ஆண்டுகளாக பாலிவுட்டில் நடித்து வரும் ஷாருக் கான் சிறந்த நடிகருக்கான தேசிய விருது வெல்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத் தக்கது.
தேசிய விருதுகள் வென்ற படங்கள்
சிறந்த நடிகர் - ஷாருக் கான் / விக்ராந்த் மாஸ்ஸே
சிறந்த தெலுங்கு திரைப்படம் - பகவந்த் கேசரி
சிறந்த துணை நடிகர் - எம் எஸ் பாஸ்கர்
சிறந்த திரைப்படம் (தமிழ்) - பார்க்கிங்
சிறந்த திரைக்கதை - பார்க்கிங் - ராம்குமார் பாலகிருஷ்ணன்
சிறந்த இசையமைப்பாளர் - ஜி.வி பிரகாஷ் - வாத்தி