Sathyaraj : வயதை கேட்டு ஷாக் ஆன ரஜினி..கூலி பட அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட சத்யராஜ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி படத்தின் செட்டில் ரஜினியுடனான உரையாடல்களை நடிகர் சத்யராஜ் பகிர்ந்துகொண்டுள்ளார்

Continues below advertisement

கூலி

லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தை இயக்கி வருகிறார். சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது . சத்யராஜ், நாகர்ஜூனா , உபேந்திரா , செளபின் சாஹிர் , ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைத்து வருகிறார். கூலி படத்தில் ரஜினி மற்றும் சத்யராஜ் கிட்டதட்ட 38 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள். நிகழ்ச்சி ஒன்றில் கூலி படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவங்களை நடிகர் சத்யராஜ் பகிர்ந்துகொண்டுள்ளார். 

Continues below advertisement

வயதை கேட்டு ஷாக் ஆன் ரஜினி

" கூலி படத்தின் கதை மற்றும் கதாபாத்திரம் பற்றி இப்போதைக்கு நான் எதுவும் பேச முடியாது. ஆனால் செட்டில் நானும் ரஜினி சாரும் ஜாலியாக நிறைய பேசிக்கொண்டோம். இத்தனை வருடங்கள் கழித்து மறுபடியும் பழைய கதைகளை எல்லாம் அரட்டை அடித்தோம். பின் இருவரும் என்ன வர்க் அவுட் செய்கிறோம் என்பதை கேட்டுக்கொண்டோம். ரஜினி சார் 'உங்களுக்கு என்ன வயசாச்சு சத்யராஜ்' என்று கேட்டார். நான் 70 என்றேன். 70 ஆச்சா என்று ஷாக் ஆனார். சார் நானும் 45 ஆண்டுகளாக நடித்து வருகிறேன் என்று அவரிடம் சொன்னேன். ஆனால் மறுபடியும் உட்கார்ந்து பழைய பிளாஷ்பேக் போய் வருவது ரொம்ப ஜாலியாக இருக்கிறது. ரஜினியுடன் எனக்கு மூன்று முகம் தான் முதல் படம் . அதற்கு பின் நான் சிகப்பு மனிதன் , நான் மகான் அல்ல , ராகவேந்திரா , தம்பிக்கு எந்த ஊர், மிஸ்டர் பாரத் என அவருடன் 7 முதல் 8 படங்கள் வரை நடித்திருக்கிறேன்" என சத்யராஜ் பேசியுள்ளார்

சத்யராஜ்

வில்லனாக தமிழ் சினிமாவில்  அறிமுகமாகி அதன்பின்  முன்னணி நடிகராக மக்களை கவர்ந்தவர் நடிகர் சத்யராஜ் . தற்போது மாதத்திற்கு ஒரு படத்தில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.  75 படங்களில் வில்லனாக நடித்துள்ள சத்யராஜ் தமிழ், தெலுங்கு, மலையாள உள்ளிட்ட 200 படங்களில் நாயகனாக நடித்திருக்கிறார். மூத்த இயக்குநர்கள் தொடங்கி இன்றைய தலைமுறை இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் வரை இணைந்து பணியாற்றி இருக்கிறார். 

Continues below advertisement
Sponsored Links by Taboola