நடிகர் சத்யராஜின் மகள் மற்றும் திமுக நிர்வாகியுமான திவ்யா சத்யராஜ் அண்மையில் ஒரு பேட்டி அளித்திருந்தார். இந்த பேட்டியில் அவர் திருமணம் குறித்த தனது பார்வைகளை பகிர்ந்துகொண்டார். அப்போது பேசிய அவர் தனக்கு தாலி கட்டி , மோதிரம் மாற்றி திருமணம் செய்துகொள்வது போஇன்ற எந்த சடங்குகளின் மீதும் நம்பிக்கை இல்லை என்று தெரிவித்திருந்தார் . இத்துடன் ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பினால் அவர் திருமணம் செய்துகொள்ள வேண்டிய கட்டாயமில்லை. திருமணம் செய்யாமல் விருப்பமுள்ளவர்கள் குழந்தைப்பெற்றுக்கொள்ளலாம். சேர்ந்து வாழ்லாம் என அவர் தனது கருத்துக்களை பகிர்ந்திருந்தார். இந்த கருத்துக்களுக்கு ஆதரவும் எதிர்ப்புகளும் ஒரு சேர கிளம்பின. இந்நிலையில் நடிகர் சத்யராஜ் தனது மகளின் கருத்தை ஆதரித்து வீடியோ வெளியிட்டுள்ளார். 

Continues below advertisement

மகளுக்கு சத்யராஜ் ஆதரவு 

என்னுடைய மகள் திருமணத்தைப் பற்றி , சாதி மதத்தை பற்றி ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். அதைப் பற்றி சிலர் ஆதரவாக கருத்து தெரிவித்திருக்கிறார்கள். சிலர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். அதைப் பற்றி என்னிடம் கருத்து கேட்டார்கள். நான் ஒரு பிரவுட் பெரியாரிஸ். எனக்கு சடங்குகள் பற்றி சாதி மதத்தைப் பற்றி பெரிய உடன்பாடு இல்லை. திருமணத்தைப் என்பது ஒரு தனி நபரின் சுதந்திரம் சம்பந்தப்பட்டது. திருமணம் செய்துகொள்வது , விவாகரத்து பெறுவதும் , தனியாகவே வாழ்வதும் அவரவர் விருப்பம். திருமணமே செய்துகொள்ளாமல் ஒரு நபர் குழந்தைப் பெற்றுக்கொள்ள விரும்பினால் கூட இன்ற மருத்துவ துறை வளர்ச்சியில் அதற்கான சாத்தியம் இருக்கிறது. அப்படி இருக்கையில் இது முழுக்க முழுக்க ஒரு தனி நபரின் விருப்பம். அந்த வகையில் என்னுடைய மகள் திவ்யாவின் கருத்தோடு நான் ஒத்துப் போகிறேன்.  நன்றி " என சத்யராஜ் தனது மகள் திவ்யாவின் கருத்திற்கு ஆதரவாக பேசியுள்ளார் 

 

Continues below advertisement

யாரிடமும் அங்கீகாரம் தேவையில்லை - திவ்யா சத்யராஜ்

"காலையில் அப்பா இந்த வீடியோவைக் காட்டி என்னை ஆச்சரியப்படுத்தினார் . திருமணம் பற்றிய எனது சமீபத்திய பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. எனக்கு ஆதரவளித்தவர்களுக்கு ஒரு பெரிய அணைப்பையும், என்னை விமர்சித்தவர்களுக்கு அதைவிடப் பெரிய அணைப்பையும் கொடுக்க விரும்புகிறேன் . என் அப்பா எப்போதும் என் மீது நம்பிக்கை வைத்து என்னை நம்பினார். எனக்கு யாரிடமிருந்தும் எந்த அங்கீகாரமும் தேவையில்லை. நிபந்தனையற்ற அன்பைப் பரப்புங்கள், எல்லோரையும் அணைத்துக் கொள்ளுங்கள். கட்டிப்பிடி வைத்தியமே சிறந்த வைத்தியம். " என தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார்.