தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் 70 கால கட்டத்தில் தொடங்கி முன்னணி நடிகராக வலம்வருபவர் நடிகர் சரத்பாபு(Actor Sarath Babu). கடந்த 1977ம் ஆண்டு தமிழில் ’பட்டினப்பிரவேசம்’ படம் மூலம் கோலிவுட்டில் தெரிந்த சரத்பாபு, தொடர்ந்து தற்போதைய தமிழ் சினிமாவின் அடையாளங்களான ரஜினி, கமல் இருவருடனும் பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் இதயங்களை கவர்ந்தார். 


கடந்த 1973ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ’நிழல் நிஜமாகிறது’ படத்தில் நடிகர் கமலுடன் அறிமுகமானார். மேலும் இந்தியா முழுவதும் பெரும் ஹிட் அடித்த ‘ஏக் துஜே கேளியே’ படத்தின் தெலுங்கு பதிப்பான  ‘மரோ சரித்ரா’ , சலங்கை ஒலி உள்பட தன் தொடக்க காலத்தில் பல படங்களில் நடிகர் கமல்ஹாசனுடன் நடித்துள்ளார்.


ALSO READ | Sarath Babu Death: பெரும் சோகம்.. பிரபல நடிகர் சரத்பாபு காலமானார்..! கண்ணீரில் ரசிகர்கள்..!


ரஜினிகாந்தின் நண்பன்:


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் முள்ளும் மலரும், நெற்றிக்கண், அண்ணாமலை, முத்து என சூப்பர் ஹிட் படங்களில் நண்பராகக் கலக்கி, ரஜினி, கமலின் நண்பர் பாத்திரம் என்றால் இவர் தான் என ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். 


தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்பட இதுவரை கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட படங்களுக்கு மேல் நடித்துள்ள சரத்பாபு, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடனும், முக்கிய இயக்குநர்களின் படங்களிலும் குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.