பவண் கல்யாண்
துணை முதலமைச்சராக பொறுப்பேற்றது முதலே பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தொடர்ந்து தெரிவித்து வருகிறார். குறிப்பாக, சனாதான விவகாரத்தில் திமுக-வை மிகக்கடுமையாக விமர்சித்தார்.
இந்த நிலையில், மீண்டும் தமிழக அரசியல்வாதிகளை குறிப்பாக திமுக-வையும், அதன் கூட்டணி கட்சிகளையும் சீண்டும் விதமாக பவன் கல்யாண் பேசியுள்ளார். மும்மொழி கொள்கையை எதிர்க்கும் தமிழ்நாட்டு அரசை விமர்சிக்கும் விதமாக பவன் கல்யாண் பேசியுள்ளது பேசுபொருளாகியுள்ளது. "தமிழக அரசியல்வாதிகள் இந்தியை ஏன் எதிர்க்கிறார்கள் என்று தெரியவில்லை என கூறினார். மேலும், தமிழக அரசியல்வாதிகள் பாசாங்குத்தனமானவர்கள் என கடுமையாக விமர்சித்த பவன் கல்யாண், இந்தியை எதிர்க்கும் அவர்கள், வணிக லாபத்திற்காக தமிழ் படங்களை இந்தியில் டப்பிங் செய்து வெளியிட மட்டும் அனுமதிக்கிறார்கள்" என அவர் குற்றம்சாட்டினார். இந்த நிலையில் பவன் கல்யாண் பற்றி இயக்குநர் சமுத்திரகனி பேசியுள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது
பவன் கல்யாண் பற்றி சமுத்திரகனி
சமுத்திரகனி தமிழில் இயக்கி நடித்த வினோதய சித்தம் படத்தை தெலுங்கில் ப்ரோ என ரிமேக் செய்தார். இந்த படத்தில் பவன் கல்யாண் நாயகனாக நடித்தது குறித்து சமுத்திரகனி நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்துகொண்டார். " தெலுங்கு இயக்குநர் த்ரிவிக்ரமிடம் வினோத சித்தயம் கதையைச் சொன்னேன் அவர் இந்த படத்தில் பவன் கல்யாண் நடித்தால் ஓக்கேவா என்று என்னிடம் கேட்டார். என்னால் நம்பவே முடியவில்லை. தமிழில் இந்த கதையில் யாரும் நடிக்கமாட்டார்கள் என்பதால் தான் நான் நடித்தேன். த்ரிவிக்ரம் ஃபோனை எடுத்து பேசிவிட்டு பவன் கல்யாண் வீட்டிற்கு என்னை காரில் அழைத்துச் சென்றார். அவரது வீட்டிற்கு சென்றதும் பவன் உடனே இந்த படத்தில் நடிக்க சம்மதித்து விட்டார். அவர் நடிப்பதாக ஒத்துக்கொண்டு ஏற்கனவே மூன்று படங்கள் நிலுவையில் இருக்கின்றன. ஆனால் இதற்கு மத்தியில் என் படத்தில் நடிக்க அவர் சம்மதித்தது எனக்கு ஆச்சரியம்தான்" என சமுத்திரகனி தெரிவித்துள்ளார்
நிலுவையில் இருக்கும் மூன்று படங்கள்
ஆந்திரா முதலமைச்சராக பதவி ஏற்பதற்கு முன்பாக பவன் கல்யாண் மூன்று படங்களுக்கு ஒப்பந்தம் செய்தார். ஓ.ஜி . பகத் சிங் , ஹரிஹர வீர மல்லு. இதில் ஹரிஹர வீர மல்லு படம் கடந்த 2020 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு வரும் மே 9 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. மீதி இருபடங்களின் படப்பிடிப்பு தற்போது நிலுவையில் உள்ளது.