பாலிவுட்டின் பிரபல நடிகர் சல்மான் கானுக்கும் அவரது தந்தைக்கும் கொலை மிராட்டல் வந்ததை தொடர்ந்து வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக மும்பை போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.


சல்மான் கான்


பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் சல்மான் கான். இவர் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த பீவி ஹோ தோ என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். ஆனால், இந்த படத்தில் இவர் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து 1989 ஆம் ஆண்டு வெளிவந்த மைனே பியார் கியா என்ற படத்தின் மூலம் தான் கதாநாயகனாக இவர் களமிறங்கி இருந்தார்.



சர்ச்சைகள்


இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்து இருந்தது. இதனை தொடர்ந்து சல்மான் கான் பல படங்களில் நடித்து கலக்கியிருக்கிறார். மேலும், 30 ஆண்டுகளுக்கும் மேலாக சல்மான் கான் அவர்கள் இந்தி திரையுலகில் ஹீரோவாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனிடையே 2002 ஆம் ஆண்டு மும்பையில் சாலை ஓரத்தில் படுத்திருந்தவர்கள் மீது சல்மான் கான் வாகனம் மோதிய சம்பவம் குறித்து பல சர்ச்சைகள் எழுந்து இருந்தது.


தொடர்புடைய செய்திகள் : June Month Rasi Palan: ஜூன் மாதம் எந்த ராசிக்கு அமோகம்...! எந்த ராசிக்கு அவஸ்தை..! முழு ராசிபலன்கள்...!


சித்து மூஸ்வாலா கொலை


சமீபத்தில் கூட பாம்பு கடித்து, காப்பாற்றப்பட்டது என சல்மான் கான் வாழ்வில் ஸ்வாரஸ்யத்திற்கு பஞ்சம் இல்லை. இந்த நிலையில், பஞ்சாபின் பிரபல பாப் பாடகரான சித்து மூஸ்வாலா கடந்த மாதம் மர்ம கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், போலீசார் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் மும்பையில் உள்ள சல்மான் கான் வீட்டிற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது. 



கொலை மிரட்டல் கடிதம்


சல்மான் கானுக்கு காலையில் வாக்கிங் செல்லும் பழக்கம் உண்டு. தினமும் காலை வாக்கிங் சொல்வதுபோல செக்யூரிட்டி துணையோடு வாக்கிங் சென்றுள்ளார். அவர் எப்போது வாக்கிங் சென்றாலும் பிரேக் எடுத்துக்கொண்டு அமர்வதற்கென்று ஒரு பிரத்யேக இடம் உண்டு. அந்த இடத்தில் உள்ள இருக்கையில் ஒரு துண்டு சீட்டு இருந்ததாக போலீசார் கூறுகின்றனர். அவருடன் வந்த காவலர்தான் அதனை கண்டுபிடித்து அதனை அவரிடம் கொடுத்துள்ளார். அதில், "மூஸ்வாலாவுக்கு நடந்தது உனக்கும் நடக்கும்", என்று எழுதி இருந்துள்ளது. 


பாப் பாடகர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னாய் ஏற்கனவே, ஒரு வழக்கு தொடர்பாக கடந்த 2018 - ஆம் ஆண்டு சல்மான் கான் நீதிமன்றத்திற்கு வந்த போது, நாங்கள் " ஜோத்பூரில் சல்மான் கானைக் கொல்வோம்" என்று கூறியது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.