கமல்ஹாசன்


இந்திய சினிமாவின் தனித்த அடையாளமாக திகழும் உலகநாயகன் கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று. தன் சக கலைஞர்கள் மட்டுமில்லாமல் இனி வரக்கூடிய தலைமுறையினருக்கு ஒரு என்ஸைக்ளோபீடியாவாக இருந்து வருகின்றன அவரது படங்கள். இந்திய திரைத்துறையைச் சேர்ந்த பலர் தீவிர கமல் ரசிகர்கள் தான். லோகேஷ் கனகராஜ், மணிகண்டன் , சூர்யா என கமலை ரோல் மோடலாக எடுத்துக்கொண்ட பலர் திரைத்துறையில் இருக்கிறார்கள். அந்த வகையில் கமலின் மற்றொரு தீவிர ரசிகர் ரோபோ சங்கர்.


கத்தாரில் கலவரம் செய்த ரோபோ சங்கர் 


சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கமலைப் பற்றிய பல விஷயங்களை ரோபோ சங்கர் பகிர்ந்துகொண்டார். " என்னுடைய இளமைக் காலத்தில் இருந்தே நான் கமல் ரசிகன் தான். நான் பள்ளி படித்துக் கொண்டிருந்தபோது கமலின் ஆளவந்தான் படம் வெளியானது. அப்போது முதல் நாள் மொட்டை அடித்துக்கொண்டு படம் பார்க்க சென்றேன். படம் பார்த்து முடித்து வீட்டிற்கு வந்து பெற்றோர்களிடம் அடி வாங்கியிருக்கிறேன். மதுரையில் இருந்த கமல் ரசிகர் மன்றம் ஒரு விழாவின் போது என்னை அழைத்து ஆளவந்தால் மாதிரி நடிக்க சொன்னார்கள். அப்போது என்னை கமலாகவே நினைத்துக் கொண்டு பால் அபிஷேகம் செய்தார்கள்' என ரோபோ சங்கர் தெரிவித்துள்ளார்.


" இன்றுவரை ஒவ்வொரு ஆண்டும் கமலின் பிறந்தநாளின் போது போஸ்டர் அடித்து ஒட்டுவேன். என் மகள் திருமணத்தின் போது தன்னுடைய தேர்தல் பிரச்சார வேலைகளை எல்லாம் விட்டு வந்து கொஞ்ச நேரம் பேசிவிட்டு போனார் கமல். கமல் சார் காரை எங்கு பார்த்தாலும் வழி மறித்து நிறுத்தி அவரை காரை விட்டு இறங்கச் சொல்வேன்.  கமலின் விக்ரம் படம் வெளியானபோது நான் கத்தாரில் படம் பார்த்தேன். திரையரங்கில் படத்தை நிறுத்தி 5 முறை ஒன்ஸ்மோர் கேட்டேன். அதனை வீடியோவாக எடுத்து கமலுக்கு அனுப்பினேன். அடுத்த முறை கமல் சார் ஆபிஸுக்கு போனபோது முதுகில் ஒரு அடி வைத்தார். என்ன உங்க அராஜகம் ஓவரா இருக்கு என்று கேட்டார். நான் அப்படிதான் பண்ணுவேன். நீங்கள் என்ன சொன்னாலும் உங்களுக்கு அப்படிதான் செய்வேன் என்று உரிமையா சொன்னேன். நாங்கள் ஃபோட்டோ எடுத்துக்கொண்டால் கூட எனக்கு எப்படியெல்லாம் வேண்டுமோ அப்படியெல்லாம் அவரை செய்யச் சொல்லி ஃபோட்டு எடுத்துக் கொள்வேன். முத்தம் கொடுத்தே ஆகவேண்டும் என்று அடம்பிடித்து ஃபோட்டோ எடுத்துக் கொண்டேன்" என ரோபோ சங்கர் தெரிவித்துள்ளார்