மனைவிக்கு எதிராக ரவி மோகன் அறிக்கை 

நடிகர் ரவி மோகன் மனைவியுடன் ஆர்த்தியுடன் விவாகரத்து பெற்று தற்போது பாடகி கெனிஷாவை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. சமீபத்தில் ரவி மோகன் மற்றும் கெனிஷா தொடர்ச்சியாக ஒன்றாக வலம் வந்த புகைப்படங்கள் இணையத்தில் பரவலாக பகிரப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஆர்த்தி ரவி தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டார். தனது குழந்தைகளை விட்டு ரவி மோகன் தனது பொறுப்புகளில் இருந்து விலகிக் கொண்டதாக அவர் குற்றம்சாட்டினார். இந்த அறிக்கை வெளியான பின் ஆர்த்திக்கு நடிகை குஷ்பு , ராதிகா ஆகியோர் ஆதரவு தெரிவித்தார்கள். ரவி மோகனை சமூக வலைதளத்தில் பலர் விமர்சிக்கத் தொடங்கினார்கள். தற்போது ரவி மோகன் அறிக்கை வெளியிட்டு விளக்கமளித்துள்ளார். 

குழந்தைகள் பற்றி ரவி மோகன் 

எனது கடந்த கால சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு எனது மனைவியை பிரிய முடிவு செய்தேனே தவிர என் குழந்தைகளை அல்ல. என் குழந்தைகள் என் என்றைக்குமான பெருமை. நான் வாழும் காலம் வரை என்னால் முடிந்தவற்றை சிறந்த விஷயங்களை அவர்களுக்கு செய்வேன். இந்த சூழ்நிலையில் எந்த ஒரு பெண்ணாக இருந்தாலும் தலை நிமிர்ந்து சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பார். மாறாக எங்கள் நிலையில் இல்லாதவர்களின் சிம்பதியை வைத்து விளையாடி இருக்க மாட்டார். 

அக்கறை என்கிற பெயரின் காழ்ப்பை விதைப்பது , நான் சம்பாதித்தது , என்னுடைய சொத்துக்கள் , என்னுடைய தன்மானம் , சமூக வலைதள கணக்குகள் , கரியர் முடிவுகள் , கடன்களை அடைப்பது ,  மட்டுமே என் வேலைகளாக மாற்றப்பட்டுவதைக் காட்டிலும்   குடும்பத்திற்காக கடுமையாக உழைக்கும் ஒருவனை ம்னமுடையச் செய்வது வேறொன்றில்லை. 

தங்க வாத்தாக என்னை பார்த்தார்கள் 

கடந்த 5 ஆண்டுகளாக நான் சம்பாதிப்பதில் ஒரு பைசாகூட என் குடும்பத்திற்கு போய்விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்து ஆர்த்தியின்  பெற்றோர்களும் ஆர்த்தியும் செழிப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக என்னுடைய பெற்ரோர்களுடன் பேச விடாமல்  அடிப்படை உரிமைகள் பறித்துக் கொள்ளப்பட்டன. இதை எல்லாம் சகித்துக் கொண்டு எதையும் சொல்லாமல் வெளியே  நார்மலாக காட்டிக் கொண்டேன். ஆனால் என் வீட்டில் என்னை ஒரு தங்க  வாத்தாகதான் பார்த்தார்கள். என்னுடைய பணம் , முடிவுகள், சொத்துக்கள், என் பெற்றோர் மற்றும் குழந்தைகளுடனான எனது பிணைப்பு எல்லாமே காதல் என்கிற பெயரால் பறிக்கப்பட்டன. 

ஆனால் நாம் அமைதியாக போக நினைத்தாலும் எல்லா பொருளாதார பொறுப்புகளையும் எடுத்துக் கொண்டுதான் இருக்கிறேன். என் நிதி பிரச்சனைக்கு முக்கிய காரணம் லைஃப்ஸ்டைல் என்கிற பெயரில் வாழும்  ஆர்பாட்டமான வாழ்க்கைதான். ஆனால் சமீபத்தில் நடந்த கார் விபத்திற்கு பின் நான் பின்வாங்கிவிட்டேன். ஏனால் நான் செய்வதேல்லாம் என் குழந்தைகளுக்குதான் போய் சேர்கிறதா என்று எனக்கு தெரியவில்லை. என்னிடம் மிச்சமிருக்கும் கொஞ்ச வாழ்க்கையை பாதுகாத்துக் கொள்ள நான் விலகிச் செல்ல வேண்டியதாக இருந்தது. சட்டரீதியான பிரச்சனைகள் , பண பிரச்சனைகள் , என் குழந்தைகளை விட்டு பிரிந்து இருப்பது என எல்லாம் சேர்ந்து எனக்கு வேறு வழியில்லை.

16 ஆண்டுகளாக கொடுமைகளை அனுபவிக்கிறேன் 

சினிமாவில் இருப்பவர்களுக்கு இது தெரியும். பல வருடங்களாக நான் கொரூரமான வற்புறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறேன். கடந்த ஆண்டு அவரது அம்மாவின் பலகோடி பிஸ்னஸிற்காக லோன் வாங்க என்னை ஸ்யூரிட்டி கையெழுத்து போட வற்புறுத்தினார்கள். அவர்களுக்கு காசு வேண்டும் என்கிற போதெல்லாம் அவர்களுக்கு ரவி மோகன் என்கிற ஆள் வேண்டும். 10 நாட்களுக்கு முன்பு நான் போட்ட கையெழுத்திற்காக அவரது லோனிற்கு பணம் கொடுக்கச் சொன்னார். இந்த மாதிரியான குடும்பத்துடன் இந்த நிலைமையில் தான் கடந்த 16 ஆண்டுகளாக நான் வாழ்ந்து வருகிறேன். ஆனால் ஒரு ஃபீனிக்ஸ் பறவை போல் நான் எழுந்து வருவேன் என்று நம்பிக்கைக் கொண்டிருக்கிறேன். தடைமட்டத்தில் நீங்கள் இருக்கும் போது எழுந்து வருவதைத் தவிர வேறு வழியில்லை. ஒவ்வொரு அடியிலும் கடவுள் என்னை வழி நடத்துகிறார். 

அதனால் நான் தெளிவாக சொல்லிவிடுகிறேன். உனது கேமை நிறுத்திக் கொள். உனது கவனமீர்க்கும் நோயை நீ தொடரலாம். ஆனால் நான் உன்னை எச்சரிக்கிறேன். இன்னொரு முறை  இதில் என்னுடைய குழந்தைகளை கொண்டு வர துணியாதே. ஒரு தந்தையாகவும் அவர்கள் வாழ்க்கையில் என்னை எதுவாக இருக்க நினைக்கிறார்களோ நான் அதுவாக இருப்பேன். உன்னை சட்டப்பூர்வமாக நீதிமன்றத்தில் மட்டுமே சந்திப்பேன். " என ரவி மோகன் தெரிவித்துள்ளார்