ஜெயம் ரவி, அசின், நதியா, பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியான ’எம்.குமரன் S/O மகாலட்சுமி’ மார்ச்-14 ம் தேதி திரையரங்குகளில் ரீரிலீஸ் ஆகிறது. 

’எம்.குமரன் S/O மகாலட்சுமி’

2004-ம் ஆண்டு இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி அசின், நதியா, பிரகாஷ் ராஜ் மற்றும் விவேக் ஆகியோர் நடிப்பில் 'எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி' திரைப்படம்.  இந்தப் படம் வெளியானபோது நல்ல வரவேற்பை பெற்றுது. வசூல் ரீதியிலாகவும் நல்ல வெற்றி  திரைப்படமாக இருந்தது. ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் இடம் பெற்ற பாடலகள் அனைத்தும் ஹிட். பலரும் ரிப்பீட் மோடில் கேட்டது. இன்றும் கூட பலருக்கும் ஃபேவரைட் பாடலாக இருந்து வருகிறது. ” நீயே நீயே பாடல்.. “ அம்மா - மகன் பாடலாகிப் போனது. பிறந்தாள், அன்னையர் தினம் என எல்லாவற்றிற்கும் இந்த பாடலை அம்மாக்களுக்கு டெடிகேட் செய்யும்படியான ஒன்றாக இருக்கிறது. 

ஜெயம் ரவி மற்றும் நதியாவின் நடிப்பு, அம்மா - மகன், அப்பா - மகன் என இரண்டு உறவுகளுக்கு இடையிலான் அன்மை மிக அழகாக இருக்கும். ரசிகர்களுக்கு அது பிடித்ததாக அமைந்திருக்கும். 

இயக்குநர் மோகன் ராஜா வீடியோ!

’எம்.குமரன் S/O மகாலட்சுமி’ திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆகிறது. இப்போது ரீரிலீஸ் ஆகும் வேளையில், இயக்குநர் ஜெயம் மோஜன் ராஜா வீடியோ வெளியிட்டுள்ளார். “ ” எம்.குமரன் S/O மகாலட்சுமி மார்ச்,14 ரீரிலீஸ் ஆகுது. 20 ஆண்டுகளில் இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பின் அடிப்படையில் ஒன்றை என்னால் உறுதியாக கூற முடியும். இது எல்லாருக்கும் பிடித்த படமாக இருந்திருக்கிறது. இளைஞர்கள், பெண்கள், குறிப்பா அம்மாக்களுக்குப் பிடித்துப்போனது. அவர்களுக்கு Close to Heart படம் இது. இளைஞர்கள் நீதான் ரீரிலீஸ் டிரெண்ட் உருவாக்கி சினிமாவை கொண்டாடினீங்க. உங்களுக்கு ஒரு கோரிக்கை. இந்தப் படத்தை அம்மாக்களுடன் குடும்பத்தினருடன் சென்று பாருங்க. திரையரங்குகளில் சென்று பார்க்கும்போது அவர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும். “ என்று தெரிவித்திருக்கிறார். 

Amma Nanna O Tamila Ammayi என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் படமாக இருந்தாலும் தமிழில் எம். குமரன் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது.  எம்.குமரன்’ படத்தில்  ‘அம்மா - பையன் பாசம், அம்மா இறந்ததுக்கு அப்புறம் அப்பாவுடன் வசிப்பது. அம்மா சொன்ன வார்த்தையை காப்பாற்றுவது. அங்கே அவனோட பாக்ஸிங் கனவும் நிஜமாகும். இப்படி இருக்கும். அதோடு, மகனிடம் இருந்து அப்பா கற்றுக்கொள்பவை என்ற கோணத்திலும் கதை அமைந்திருக்கும். இது ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.