கெனிஷா வெளியிட்ட புதிய பாடல்
ரவி மோகன் ஆர்த்தி விவாகரத்து சர்ச்சையைத் தொடர்ந்து பாடகி கெனிஷா பெரிய பிரபலமாகிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். சின்ன சின்ன இசை நிகழ்ச்சிகளில் பாடிவந்த அவர் தற்போது சொந்தம்மாக மியுசிக் வீடியோவை தற்போது வெளியீட்டுள்ளார். தற்போது கெனிஷா ஃபிரான்சிஸ் வெளியிட்டுள்ள புதிய பாடல் சமூக வலைதளத்தில் பரவலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. 'அன்றும் இன்றும்' என்கிற இந்த பாடலின் இறுதியில் நடிகர் ரவி மோகன் இடம்பெற்றுள்ளது மேலும் பேசுபொருளாகியுள்ளது.
ரவி மோகன் விவாகரத்து
நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியும் கடந்த ஆண்டு விவாகரத்து பற்றி அறிவித்தார்.இதனைத் தொடர்ந்து ரவி மோகன் மற்றும் ஆர்த்தி இருவர் தரப்பில் இருந்தும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இந்த பிரச்சனைகளுக்கு பாடகி கெனிஷா ஃபிரான்சிஸ் தான் காரணமென கூறப்பட்டது. கெனிஷா தனது நெருங்கிய நண்பர் என்றும் இருவரும் சேர்ந்து ஹீலிங் செண்டர் ஆரம்பிக்க இருப்பதாக ரவி மோகன் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. இப்படியான நிலையில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வீட்டு திருமணத்திற்கு ரவி மோகன் மற்றும் கெனிஷா இணைந்து கலந்துகொண்டது பிரச்சனையை மேலும் மோசமாக்கியது. ஆர்த்தி ரவி மோகன் இருவரும் அடுத்தடுத்து அறிக்கைகளை வெளியிட்டனர். இருவரது விவாகரத்து வழக்கும் ஒரு பக்கம் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் ஒருவரைப் பற்றி இன்னொருவர் அவதூறு பரப்பும் விதமாக செய்திகளோ , அறிக்கைகளோ வெளியிடக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது.
ரவி மோகன் நடித்து வரும் படங்கள்
ஜெயம் ரவி தற்போது கணேஷ் கே பாபு இயக்கும் கராத்தே பாபு படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குநர் புவனேஷ் அர்ஜூனன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் ஜீனி. இப்படத்தில் மூத்த நடிகை தேவயானி, இளம் நடிகைகளான க்ரித்தி ஷெட்டி , கல்யாணி பிரியதர்ஷன் , வாமிகா கப்பி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இது தவிர்த்து தனது அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் ரவி மோகன் தனி ஒருவர் 2 ஆம் பாகத்திலும் நடிக்க இருக்கிறார். கடைசியாக ரவி மோகன் நடித்து வெளியான காதலிக்க நேரமில்லை படம் ஓரளவிற்கு பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றது.