Rana Daggubati : அவர்கூட பேசின பிறகு என் வாழ்க்கையே மாறிடுச்சு..மருத்துவமனையில் ரஜினியை சந்தித்த அனுபவத்தை பகிர்ந்த ரானா டகுபதி

மருத்துவமனையில் ரஜினியை சந்தித்ததாகவும் அப்போது அவருடன் பேசிய ஒரு மணி நேரம் தனது வாழ்க்கையே மாற்றியதாகவும் நடிகர் ரானா டகுபதி தெரிவித்துள்ளார்

Continues below advertisement

வேட்டையன்

த.செ ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன். அமிதாப் பச்சன் , ஃபகத் ஃபாசில் , ரானா டகுபதி , துஷாரா விஜயன் , மஞ்சு வாரியர் , ரித்திகா சிங் , ரக்‌ஷன் , அபிராமி உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் இப்படத்தில் வேலை செய்துள்ளார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் தற்போது இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரானா டகுபதி தனது வாழ்க்கையில் இக்கட்டான  நேரத்தில் ரஜினியை சந்தித்த அனுபவத்தை ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டார். 

Continues below advertisement

ரஜினி பற்றி ரானா டகுபதி

" எல்லாருக்கும் கிளாஸ்மேட்ஸ் ,காலேஜ் மேட்ஸ் இருப்பார்கள். ஆனால் ரஜினி சார் எனக்கு ஹாஸ்பிடன் மேட். என் உடலில் மிக ஆபத்தான ஒரு நோய் இருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவமனையில் நான் ரஜினி சாரிடம் பேசினேன் . அவருடன் பேசிய அந்த ஒரு மணி நேரம் என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது. ரொம்ப நன்றி சார்." என ரானா மிக உருக்கமாக பேசினார்.

வேட்டையன் பட இயக்குநர் பற்றி அவர் பேசியபோது " நான் ஜெய்பீம் படத்திற்கு பெரிய ரசிகன். ஞானவேல் ராஜா மாதிரி ஒரு நேர்மையான இயக்குநரை நான் சந்தித்தது இல்லை. " என்றார்

Continues below advertisement