தமிழ் திரையுலகின் மிகவும் பிரபலமான குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகர் ரமேஷ் திலக். இவருடைய நெருங்கிய நண்பரும், நடிகருமானவர் மணிகண்டன். இவரைப் பற்றி ரமேஷ் திலக் சுவாரஸ்யமான தகவல் ஒன்றை திரைப்பட இயக்குனரும், நடிகருமான சித்ரா லட்சுமணனுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அந்த நேர்காணலில் அவர் கூறியிருப்பதாவது,
மணிகண்டனுக்கு நடிப்பதில் ஆர்வம் இல்லை:
எனக்கு குட்நைட் தெரியும் சார். ஏனென்றால் அதில் மணிகண்டன் வந்துவிட்டான். மணிகண்டனை குறும்பட காலம் முதலே எனக்குத் தெரியும். என்கிட்ட நல்ல உரிமையா பேசும் ஒருவன். ஆனால், அவனைப் படம் பண்ண வைப்பது ரொம்ப கஷ்டம். ஏனென்றால், அவனுக்கு எழுத்து வேலைதான் ரொம்ப பிடிக்கும்.
கேமரா முன்பு வந்து நிற்பதில் எல்லாம் அவனுக்கு உடன்பாடே கிடையாது. அவனுக்கு டைரக்ஷன்தான் பிடிக்கும். ஆனால், அவன் மிகச்சிறந்த நடிகன். அதனால்தான் குட் நைட் படத்திற்கு கெஞ்சிக்கூத்தாடி கூட்டிட்டு வந்தோம். ப்ரொடக்ஷன் எல்லாம் கூட்டிட்டு வரல. நான் கூட்டிட்டு வந்தேன்.
குட் நைட்டில் நடித்தது எப்படி?
தயாரிப்பு நிறுவனத்துல மணிகண்டன் வேணும்னு சொல்லிட்டாங்க. டேய் மணியா வாடானு சொன்னேன். ஏய் இல்ல.. இல்ல எழுதனும்னு சொன்னான். எழுதலாம்டா வாடா சொல்லி சொல்லி கூப்பிட்டு வந்து, அதுக்கு அப்புறம் பவுண்ட் கொடுத்து படிக்கச் சொல்லி நல்லா இருக்குது.
ஆனா, அங்கங்க சொன்னான். சரிடா, அதை கரெக்ட் பண்ணிக்கலாம் சொல்லி அதுக்குப்புறம் விநாயகவை அறிமுகப்படுத்தி அதுக்கு அப்புறம் உள்ளே வந்ததுதான். ஒரு தடவை அவன் உள்ளே வந்துட்டானா படத்தை அவன் எடுத்துக்குவான். அது அவன் ஒர்க் பண்ற எல்லா படத்துக்குமே.
கூடுதல் திரைக்கதை:
அவனை ஒரு பேக்கேஜ்ல எடுக்கலாம். அவரை புக் பண்ணிட்டோம்னா கடைசியா லாக் பண்ணி படம் ரிலீஸ் ஆகுற வரைக்கும் எல்லா வேலையும் அவனே பாத்துக்குவான். அவன் உள்ளே வரும்போது எங்களுக்குத் தெரியும். அந்த படத்துல கூடுதல் திரைக்கதையும் அவன் பண்ணியிருந்தான்.
இவ்வாறு அவர் பேசினார்.
விநாயக் சந்திரசேகரன் இயக்கிய இந்த படத்தில் மணிகண்டன், மீதா ரகுநாத் ஆகியோர் ஜோடியாக நடித்திருப்பார்கள். ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், பகவதி பெருமாள், ரேச்சல் ரிபெக்கா, உமா ராமச்சந்திரன், நிகிலா ஆகியோர் நடித்திருப்பார்கள்.
சான் ரோல்டன் இசையமைத்த இந்த படத்திற்கு ஜெயந்த் சேதுமாதவன் ஒளிப்பதிவு செய்திருப்பார். பரத் விக்ரமன் எடிட்டிங் செய்திருப்பார். 4 கோடியில் எடுக்கப்பட்ட இந்த படம் மிகப்பெரிய வெற்றி்பபடமாக அமைந்தது.
