மலையாள சினிமாவில் த்ரில்லர் ஜானரில் பல படங்கள் வந்துள்ளன. குடும்பங்களை சுற்றி நடக்கும் கதையை வைத்தே சிறந்த த்ரில்லர் படமாக எடுப்பதில் வல்லவர்களாக திகழ்கின்றனர். குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி கோடி கணக்கில் வசூலை படங்களின் பட்டியல் அதிகம். அந்த வகையில் கடந்த 2013ஆம் ஆண்டில் இயக்குநர் ஜூத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான திரைப்படம் த்ரிஷ்யம். இப்படத்தில் மோகன் லால், மீனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் மலையாளத்தில் பல கோடிகள் வசூல் செய்தது. 

பிற மொழிகளில் ரீமேக்

இதைத்தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இப்படம் ரீ-மேக் செய்யப்பட்டது. அதில் மோகன் லால் கேரக்டரில் தமிழில் கமலும் இந்தியில் அஜய்தேவ்கானும் நடித்திருந்தனர். இரண்டு மொழிகளிலும் ஜூத்து ஜோசப்பே இயக்கியிருந்தார். த்ரிஷ்யம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்தை எடுத்திருந்தார்.அப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் மூன்றாம் பாகத்தையும் ஜூத்து ஜோசப் இயக்கி வருகிறார்.

இரண்டாம் பாகம் எடுக்கும் எண்ணம் இல்லை

 திரிஷ்யம் 3 இயக்குவதில் பிஸியாக இருக்கும் ஜீத்து ஜோசப் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், இரண்டாம் பாகம் இயக்கும் எண்ணமே இல்லை. திடீரென ஒரு கதை தோன்றியது அதை வைத்து தான் 2ஆம் பாகம் எடுத்தேன். 3ஆம் பாகத்திற்கு க்ளைமேக்ஸ் கிடைத்து விட்டது. ஆனால், கதை உருவாக்குவதில் தான் சிரமம் இருந்தது. அதற்காகத்தான் கொஞ்சம் நேரம் எடுத்துக்கொண்டேன். 3ஆம் பாகம் குறித்து மோகன் லாலிடம் கூறியபோது அவருக்கும் பிடித்து விட்டது எனக் கூறினார். 

பாபநாசம் ரஜினி நடிக்க வேண்டியது

தமிழில் த்ரிஷ்யம் படத்தின் ரீமேக்கை இயக்க நினைத்த போது முதலில் ரஜினி தான் நடிக்க வேண்டியிருந்தது. ஆனால், இப்படத்தில் ரஜினியை போலீஸ் தாக்குவது போன்ற காட்சி இருக்கிறது. அப்படி வைத்தால் அவரது ரசிகர்களுக்கு பிடிக்காது என முடிவெடுத்தேன். அந்த நேரத்தில் தான் கமல் நடிக்க ஒப்புக்கொண்டார். பாபநாசம் படத்தை பார்த்த ரஜினிகாந்த் அவரது ஸ்டைலில் சூப்பர், வாழ்த்துகள் என தெரிவித்தார். அவருக்கே உரிய வகையில் இதை கூறியது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இதை சொல்ல பெரிய மனது வேண்டும் என ஜுத்து ஜோசப் கூறியுள்ளார். 

ரஜினி தவறவிட்ட படங்கள்

தமிழில் ரஜினிகாந்த் இளம் இயக்குநர்களுடன் இணைந்து நடித்து வந்தாலும், அவர் மனதை தொட்ட படங்களில் நடிக்க முடியாமல் போனதற்கான வருத்தத்தை தெரிவித்திருக்கிறார். குறிப்பாக, காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் வெளியான கடைசி விவசாயி படத்தில் ரஜினிதான் நடிக்க வேண்டியிருந்தது. கால்ஷீட் பிரச்னையால் தவறவிட்டார். இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் அரசியல் பின்னணி கொண்ட கதை மற்றும் துருவ நட்சத்திரம் போன்ற படங்களில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.