ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தைத் தொடர்ந்து கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் நடிக்க இருக்கிறார். இதுவே ரஜினியின் கடைசி படமாக இருக்க வாய்ப்பிருப்பதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Continues below advertisement

நெல்சன் இயக்கத்தில் ரஜினி கமல் 

சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலிப்குமார் இயக்கும் ஜெயிலர் திரைப்படம் அடுத்த ஆண்டு திரையரங்கில் வெளியாக இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இதனால் ஜெயிலர் படத்தின் மீது ரசிகர்கள் பெரியளவில் எதிர்பார்ப்பு வைத்துள்ளார்கள். இப்படத்ததை தொடர்ந்து ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் கமல் ரஜினி இணைந்து நடிக்க உள்ளனர். இந்த படத்தை முதலில் லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது நெல்சன் இப்படத்தை இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்திற்கான திரைக்கதையை எழுத ஒரு ஆண்டுகாலம் நெல்சன் அவகாசம் கேட்டுள்ளதாகவு 2027 ஆம் ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என கூறப்படுகிறது 

Continues below advertisement

சினிமாவில் இருந்து ஓய்வு பெறுகிறாரா ரஜினி ?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில ஆண்டுகளாக தனது சுயசரிதையை எழுதுவதில் கவனம் செலுத்தி வருகிறார். தமிழ் தெலுங்கு , இந்தி , என இந்திய சினிமாவில் கடந்த 50 ஆண்டுகளாக நடித்து உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். இந்த ஆண்டு 75 வயதை எட்டவிருக்கும் ரஜினிகாந்த் விரைவில் சினிமாவில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டு வருவதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. நெல்சன் இயக்கத்தில் கமலுடன் இணைந்து நடிக்கவிருக்கும் படமே அவரது கடைசி படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை என்றாலும் இந்த தகவல்கள் உண்மையாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமிருப்பதாக கூறப்படுகிறது. 

ரஜினி முதல் படம் 

1975 ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இந்த படத்தில் ரஜினி கமல் இணைந்து நடித்தனர். தனது சினிமா பயணத்தை  கமலுடன் இணைந்து தொடங்கிய  ரஜினிகாந்த் அதே  திரைவாழ்க்கையை கமலுடன் இணைந்து முடிக்கவிருக்கிறாராம்.