ராஜேஷ் மரணம்:

பள்ளியில் ஒரு ஆசிரியராக, சென்னையில் தன்னுடைய பணியை துவங்கியவர் நடிகர் ராஜேஷ். இதை தொடர்ந்து நடிப்பின் மீது ஆர்வம் இருந்ததால், பாலச்சந்தர் இயக்கிய 'அவள் ஓவர் தொடர்கதை' படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை கட்சிதமாக பயன்படுத்தி கொண்டு, 'கன்னி பருவம்' படத்தில் ஹீரோவாக மாறினார். சுமார் 50 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த ராஜேஷ், இன்று காலை ரத்த அழுத்தம் குறைந்து, மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்தார்.

Continues below advertisement

தனக்கு தானே கல்லறை கட்டிய ராஜேஷ்:

இவருடைய மறைவை தொடர்ந்து, ராஜேஷ் பற்றிய அரிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது நடிகர் ராஜேஷ் இறப்பதற்கு 35 வருடங்களுக்கு முன்பே தனக்கு தானே கல்லறை காட்டியுள்ளார் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? 40 வயதிலேயே ராஜேஷ் கல்லறை கட்ட காரணம் என்ன? என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம். 

Continues below advertisement

ராஜேஷின் பேட்டி:

நடிகர் ராஜேஷ் தன்னுடைய 40 வயதிலேயே கல்லறை கட்டி வைக்க காரணமாக இருந்தவர் யார் என்பதை பற்றி தன்னுடைய பழைய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதாவது பிரபல தொழிலதிபர் ஜிஆர்பி விஸ்வநாதனை பார்த்து தான், அவரின் வழியை பின்பற்றி இந்த முடிவை எடுத்தாராம் ராஜேஷ். அவரும் தான் இறப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே தனக்கு பிடித்த மாதிரி ஒரு கல்லறையை கட்டி முடித்தாராம். பின்னர் சுமார் 27 ஆண்டுகளுக்கு பின்னர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

சீனாவில் உள்ள நம்பிக்கை:

அதே போல் சீனாவில், ஒரு நம்பிக்கை உண்டாம். "எவன் ஒருவன் தன்னுடைய இறப்புக்கு முன்பே தனக்கு கல்லறை அமைத்து கொள்கிறாரோ அவன் நோய்களை வென்று 100 ஆண்டுகள் வாழ்வான் என்பது ஒரு நம்பிக்கை. இந்த நம்பிக்கை குறித்தும் அந்த பேட்டியில் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

2-ஆவது முறை புதுப்பிக்கப்பட்ட கல்லறை:

ராஜேஷ் இப்படி கல்லறை கட்டியதற்கு மற்றொரு காரணமும் கூறப்படுகிறது. அதாவது நடிகர் ராஜேஷை பொறுத்தவரை தான் பயன்படுத்தும் விஷயங்கள் தனக்கு பிடித்தது போல் இருக்க வேண்டும் என நினைப்பவர். அப்படி பார்த்தால் தான் இறந்த பின்னர் தன்னை அடக்கம் செய்ய போகும் கல்லறை கூட தனக்கு பிடித்த மாதிரி டிசைன் செய்ய நினைத்தார். எனவே தன்னுடைய 40 வயதில் மார்பல் கற்கள் கொண்டு தன்னுடைய கல்லறையை கட்டி முடித்தார்.

அந்த கல்லறை 25 ஆண்டுகளுக்கு பின்னர் பாசி பிடித்து கல் மங்க துவங்கியதால்... கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் அதை மீண்டும் Garnet கல் கொண்டு புதுப்பித்தார். தன்னுடைய மார்பளவு சிலை ஒன்றையும் அதில் நிறுவியுள்ளார் ராஜேஷ் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கல்லறை பல லட்சம் செலவு செய்து கட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.