ராகவா லாரன்ஸ்
குரூப் டான்ஸராக இருந்து, பின் நடன இயக்குநராக தனக்கென ஒரு அடையாளத்தைப் பிடித்தவர் நடிகர் ராகவா லாரன்ஸ் (Raghava Lawrence). இதற்கு பின் படிப்படியாக நடிப்பு, இயக்கம் என பல திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார். சினிமா தவிர்த்து மாற்றுத் திறனாளிகளுக்கு என தனியாக நடனம் கற்பிப்பது, அவர்களின் நலனுக்கு பல நலத் திட்டங்களை தன்னார்வல நிறுவனங்களின் உதவியுடம் முன்னெடுப்பது என களச் செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
’சேவையே கடவுள்’ என்கிற அறக்கடளை ஒன்றை நடிகர் ராகவா லாரன்ஸ் நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளையில் லாரன்ஸூடன் நடிகர் எஸ்.ஜே சூர்யா, நடிகர் பாலா மற்றும் அறந்தாங்கி நிஷா உள்ளிட்டவர்களும் செயல்பட்டு வருகிறார்கள். சேவையே கடவுள் அறக்கட்டளை சார்பாக மாற்றம் என்கிற செயல்திட்டம் ஒன்றை தொடங்கியுள்ளார் லாரன்ஸ். இந்தத் திட்டத்தின் வழியாக பொதுமக்களுக்கு தேவையான பல்வேறு சேவைகளை தன்னார்வலர்களின் உதவியோடு செய்ய இருக்கிறார். விவசாயிகளுக்கு டிராக்டர்கள் வழங்குவது , பெண்களுக்கு தையல் மிஷின்களை வாங்குவது என தொடர்ச்சியாக பல உதவிகளை செய்துள்ளார். அந்த வகையில் தற்போது டெய்லர் ஒருவருக்கு உதவ முன்வந்துள்ளார்
கண்ணீல் ஊசி பட்டு சிகிச்சைக்கு பணமில்லாமல் தவித்த நபர்
டெய்லர் ஒருவர் தைக்கும் போது மெஷின் ஊசி அவர் கண்ணில் பட்டு காயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவ சிகிச்சைக்கு பணமில்லாமல் அவர் தவித்து வந்த நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் அவருக்கு புதிய தையல் மெஷின் ஒன்றினையும் அவர் கண் சிகிச்சைக்கான நிதியும் கொடுத்து உதவியுள்ளார்.