தென்னிந்திய சினிமா மற்றும் இந்தியிலும் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக வலம் வருபவர் நடிகர் பிரித்விராஜ். ஒரு நடிகராக மட்டுமின்றி இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முக கலைஞராக திறம்பட செயல்பட்டு வருகிறார். தமிழ் சினிமாவில் கனா கண்டேன் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் அதை தொடர்ந்து பாரிஜாதம், மொழி, ராவணன், கண்ணாமூச்சி ஏனடா, காவியத் தலைவன். நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட படங்களில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.




100 கோடி கிளப் :


கடந்த ஆண்டு பிரித்விராஜ் நடிப்பில் வெளியான 'சலார்' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றதை தொடர்ந்து தற்போது அவர் நடிப்பில் வெளியான 'ஆடு ஜீவிதம்' திரைப்படம் சர்வதேச அளவில் வரவேற்பை பெற்று 100 கோடி கிளப்பில் இணைந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. பிரித்விராஜ் அபாரமான நடிப்பு உலகளவில் பாராட்டுகளை குவித்தது. இப்படத்தின் அமோக வெற்றியால் பிரித்விராஜ் மார்க்கெட் வேல்யூ பன்மடங்காக உயர்ந்துவிட்டது. அதனால் அவரின் சம்பளமும் பலமடங்கு அதிகரித்துவிட்டது. 


லூசிபர் 2 :


பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியான லூசிபர் மற்றும் ப்ரோ டேடி ஆகிய இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட் வெற்றி பெற்று வசூலிலும் வேட்டை ஆடியது. அதன் வெற்றியை தொடர்ந்து லூசிபர் 2 படத்தின் பணிகள் விரைவில் தொடங்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். இப்படி திரைத்துறையில் கலக்கி வரும் நடிகராக வலம் வரும் பிரித்விராஜ் அண்ணனும் ஒரு பிரபலமான நடிகர் என்பது பலரும் அறிந்திடாத ஒரு விஷயம். 


 



பிரித்விராஜ் அண்ணன் :


பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான சுகுமாரின் மகன் தான் நடிகர் பிரித்விராஜ். இவருக்கு அண்ணன் ஒருவர் இருக்கிறார். மலையாள திரையுலகில் ஏராளமான படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் இந்திரஜித் தான் பிரித்விராஜ்  அண்ணன். தமிழில் நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான 'சர்வம்' படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமானவர் நடிகர் இந்திரஜித். தற்போது அவரின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தான் நடிகர் பிரித்விராஜ் அண்ணனா என பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறார்கள்.