தி கோட் 


விஜயின் தி கோட் படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. உலகம் முழுவதும் படத்திற்கான முன்பதிவுகள் தொடங்கி எல்லா காட்சிகளும் ஹவுஸ்ஃபுல்லாகி வருகின்றன. படத்திற்கு நாலா பக்கம் இருந்து ப்ரோமோஷன் வேலைகளை தீவிரப்படுத்தி இருக்கிறது படக்குழு. பொதுவாக வெங்கட் பிரபு படம் என்றாலே அதில் நாம் வெங்கட் பிரபுவை பார்க்காமல் இருக்க முடியாது. அந்த வகையில் தி கோட் படத்திலும் பிரேம்ஜி நடித்துள்ளார்.


சமீபத்திய நேர்காணல் ஒன்றில் படத்தில் தனது கதாபாத்திரம் பற்றியும் படம் குறித்தும் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார் பிரேம்ஜி


விஜய்க்கு மாமாவாக பிரேம்ஜி


படத்தில் தனது கேரக்டர் பற்றிய பேசிய பிரேம்ஜி “மங்காத்தா படத்தின் வெற்றியின்போதே விஜய் எங்கள் எல்லாரையும் அழைத்து அவர் வீட்டில் பார்ட்டி கொடுத்தார். அப்போது நான் அவரிடம் நான் உங்களுடன் ஒரு காட்சியிலாவது திரையில் நடிக்க வேண்டும் என்று சொன்னேன். அதற்கு விஜய் . நீ தல ஆளுன்னு எனக்கு தெரியும் . நீ என்னோட படத்துக்கு மியூசிக் பண்ணு என்று சொன்னார். அவர் சொன்னதுபோலவே தி கோட் படத்தில் நான் ஒரு ரீமிக்ஸ் பாடலுக்கு இசையமைத்திருக்கிறேன்.


இந்தப் படத்தில் நான் சினேகாவின் தம்பியாக நடித்திருக்கிறேன். அப்பா விஜய் எனக்கு மாமா. அதே போல் மகன் விஜய் என்னை மாமா என்று அழைப்பார்.  படத்தில் நான் குறைவான காட்சிகளில் நடித்திருந்தாலும் இரண்டு விஜயுடனும் நடித்திருக்கிறேன்.


விஜயின் கார் நம்பர் 






 நடிகர் விஜய் தனது அரசியல் செயல்பாடுகளையும் இன்னொரு பக்கம் தீவிரப்படுத்தி இருக்கிறார். வரும் 2026 ஆம்  ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அவரது தமிழக வெற்றிக் கழகம் போட்டியிட இருக்கிறது.  இதனால் தி கோட் படத்தில் விஜயின் அரசியல் கட்சித் தொடர்பான ரெஃபரன்ஸ் இந்த படத்தில் இருக்குமா என்று பல்வேறு கேள்விகள் இருந்து வருகின்றன. அந்த மாதிரியான ஒரு ரெஃபரன்ஸ் இப்படத்தில் இருப்பதாக பிரேம்ஜி தற்போது தெரிவித்துள்ளார். அதாவது தி கோட் படத்தில் விஜயின் கார் நம்பர் சி.எம் 2026 என்றிருக்கும் . அந்த காருக்குள் தானும் விஜயும் இருக்கும் காட்சி உள்ளதாக பிரேம்ஜி தெரிவித்துள்ளார்.