நடிகர் பிரஷாந்துக்கு நடிக்க வேண்டும் என்பதில் துளியும் ஆர்வம் இல்லை. ஒரு மருத்துவர் ஆக வேண்டும் என்பது தான் இவரது கனவு. 12-ஆம் வகுப்பு படித்து முடித்ததும், மருத்துவ நுழைவு தேர்வு எழுதி முடித்த பிரஷாந்த், ஜூடோ பயிற்சியில் ஈடுபட்ட போது, தியாகராஜன் வீட்டுக்கு எதேர்சையாக வந்த சிலர், உங்களுக்கு இவ்வளவு பெரிய பையனா? என கேட்டது மட்டும் இன்றி அவரை வைத்து படம் பண்ண வேண்டும் என ஆசைப்பட்டுள்ளனர்.
விடுமுறையில் வீட்டில் இருந்த பிரஷாந்த், ஒரு மாதத்தில் நடித்து முடித்த படம் தான் 'வைதேகி பொறந்தாச்சு'. விளையாட்டாக நடித்த இந்த படம் 1990 ஆம் ஆண்டு திரைக்கு வந்து சக்கைபோடு பட்டது. பிரசாந்தின் அழகும், அவரின் மேநாரீசமும் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்து போகவே அடுத்தது, வண்ண வண்ண பூக்கள், செம்பருத்தி, உனக்காக பிறந்தேன், திருடா திருடா, ராசாமகன், செந்தமிழ் செல்வன், ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள் பூமகள் ஊர்வலம், குட்லக், வின்னர், கோட், அந்தகன் என்று ஏராளமான படங்களில் நடித்தார்.

பிரசாந்த் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த போது வெளிநாட்டை சேர்ந்த தொழிலதிபரின் மகளான கிரஹலட்சுமியை 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். ஆனால், ஏற்கனவே கிரஹ லட்சுமிக்கு திருமணம் ஆனதை மறைத்து பிரஷாந்துக்கு திருமணம் செய்து வைத்ததாக கூறப்பட்டது. இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, ஒரேயடியாக இவர்கள் பிரியவும் காரணமாக அமைந்தது.
பிரஷாந்துக்கு கிரஹலட்சுமி மூலம் மகன் ஒருவரும் உள்ளார். அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 3 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இப்போது நடிகர் பிரஷாந்துக்கு 51 வயதாகிறது. பிரஷாந்த் விவாகரத்துக்கு பின்னர் நடித்த படங்கள் எதுவுக்கும் அவருக்கு பெரிதாக கை கொடுக்கவும் இல்லை. ஆனால் கடந்த ஆண்டு நடித்த அந்தகன் படம் ஓரளவு வரவேற்பை பெற்றது.
கூடிய விரைவில், பிரஷாந்துக்கு 2-ஆவது திருமணம் செய்து வைக்க, அவரின் பெற்றோர் முயற்சி செய்து வரும் நிலையில், இவரின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இவர் அறிமுகமான காலகட்டத்திலேயே விஜய் மற்றும் அஜித்தை விட அதிக சம்பளம் வாங்கினார். எனவே இவர் சம்பாதித்த பணத்தை கொண்டு, இவரின் தந்தை டிநகரில் வாங்கி போட்ட இடத்தில் தான் இன்று பிரஷாந்த் கோல்டன் டவர் உள்ளது. இதன் மதிப்பு 100 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இதில் பல நிறுவனங்கள் அமைந்துள்ள நிலையில் இதன் மூலம் மட்டுமே மாதம் 1 கோடிக்கு மேல் இவருக்கு கிடைத்திக்கிறது. இதை தொடர்ந்து, சென்னையில் இவருக்கு சொந்தமாக சில வீடுகள் உள்ளது. ஆடி, BMW போன்ற கார்களும் உள்ளது. மொத்தத்தில் இவரின் சொத்து மதிப்பு 200 கோடி வரை இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் இதற்கான அதிகார பூர்வ தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.