வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய முன் வாருங்கள் - நடிகர் பிரசாந்த் வேண்டுகோள்

வயநாட்டில் மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய அனைவரும் முன்வர வேண்டும் என வேண்டி விரும்பி கேட்டுகொள்கிறேன் என தெரிவித்தார்.

Continues below advertisement

நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'அந்தகன்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் நடிகர் பிரசாந்த் மற்றும் நடிகைகள் சிம்ரன், பிரியா ஆனந்த் உள்ளிட்ட படக் குழுவினர் கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய நடிகர் பிரசாந்த், அந்தகன் திரைப்படம் பார்வையற்ற பியானோ கலைஞர் பற்றிய இசை சார்ந்த படம் என்றும், அதேசமயம் மர்மங்கள் நிறைந்த சுவாரஸ்ய அம்சங்கள் பொருந்திய படமாகவும் இருக்கும் என்றும் கூறினார். விநியோகஸ்தர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில், வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி படம் வெளியாக உள்ளது எனவும், இந்த திரைப்படம் ரீமேக் படம் இல்லை, ரீமெட் படம். 110 சதவீதம் தமிழ் படம் பார்க்கும் அனுபவத்தை கொடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

Continues below advertisement

400 திரையங்குகளில் வெளியீடு

தற்போது அந்தகன் திரைப்படம் 400 திரையரங்குகள் வரை வெளியாக உள்ளது எனவும், திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனவும் அவர் கூறினார். ஹெல்மெட் அணியாததால் அபராதம் விதிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு, கடந்த ஓராண்டு காலமாக ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வருகிறேன் எனவும், தனக்கு அபராதம் விதிக்கப்பட்டதன் மூலம் ஹெல்மெட் அணிவது குறித்த முக்கியத்துவம் தற்போது வைரலாகி வருகிறது எனவும் அவர் பதில் அளித்தார். மேலும் வயநாட்டில் மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய அனைவரும் முன்வர வேண்டும் என வேண்டி விரும்பி கேட்டுகொள்கிறேன் என தெரிவித்தார்.

Continues below advertisement