Prashanth: தி கோட் படத்தில் பிரசாந்தின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Prashanth Salary : வெங்கட் பிரபு இயக்கியுள்ள விஜயின் தி கோட் படத்தில் நடிக்க நடிகர் பிரசாந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா மக்களே

Continues below advertisement

தி கோட் 

வெங்கட் பிரபு இயக்கட்தில் விஜய் நடித்துள்ள தி கோட் படம் கடந்த நேற்று செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகியது. இப்படத்தில் பிரபுதேவா , பிரசாந்த் , சினேகா , லைலா , மீனாக்‌ஷி செளதரி , பிரேம்ஜி , ஜெயராம் , யோகி பாபு , அஜ்மல் , மோகன் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் நடித்துள்ளார்கள். இவர்கள் தவிர்த்து நடிகை த்ரிஷா, சிவகார்த்திகேயன் உள்ளிட்டவர்கள் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்கள். யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார் . ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் இப்படத்தை தயாரித்துள்ளது. 

Continues below advertisement

தி கோட் படத்தின் கதை

ஒரு ரிவெஞ்சு ஸ்டோரியை அடிப்படையாக வைத்து விஜய் ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடும் ஒரு மாஸ் ஆக்‌ஷன் திரைப்படத்தை இயக்கியுள்ளார் வெங்கட் பிரபு. யூகிக்கக்கூடிய திரைக்கதையாக இருந்தாலும் படத்தில் அடுத்து வரும் ட்விஸ்ட்கள் ரசிகர்களை உற்சாகத்தோடு வைத்திருக்கின்றன. விஜய் தனது அரசியல் வருகைக்கு முன் தனது ரசிகர்களுக்கு ஒரு முழுக்க முழுக்க கமர்ஷியல் படத்தைக் கொடுத்திருக்கிறார். 

தி கோட் படத்தில் சினேகா , மோகன் , டாப்ஸ்டார் பிரசாந்த் , பிரபுதேவா , லைலா என 90களில்  பெரிய ஸ்டார்களாக இருந்த நடிகர்கள் நடித்துள்ளார்கள். இதில் டாப்ஸ்டார் பிரசாந்தின் கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேலும் விசில் போடு பாடலில் விஜய் பிரபுதேவாக்கு இணையாக பிரசாந்த் நடனமாடி அவருக்கு பாராட்டுக்களை குவித்தார். படத்திலும் மற்ற கதாபாத்திரங்களைக் காட்டிலும் அவருக்கு முக்கியமான ரோல் தரப்பட்டிருக்கிறது.

தி கோட் படத்தில் பிரசாந்த் சம்பளம்

தி கோட் படத்திற்கு முன்பாக பிரசாந்த் நடித்த அந்தகன் திரைப்படம் வெளியானது. இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றது. தற்போது அவர் நடித்துள்ள தி கோட் படமும் பெரியளவில் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்த இரண்டு படங்களுக்குப் பின் டாப்ஸ்டார் பிரசாந்த் தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

தி கோட் திரைப்படம் முதல் நாளில் இந்தியாவில் 43 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது விஜயின் முந்தைய படமான லியோ படத்தின் வசூலை காட்டிலும் குறைவு என்றாலும் அடுத்தடுத்த நாட்களில் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது

தற்போது தி கோட் படத்தில் பிரசாந்த் சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தில் நடிக்க பிரசாந்த் 5 கோடி சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Continues below advertisement
Sponsored Links by Taboola