சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளியான வின்னர் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continues below advertisement


கடந்த 2003ஆம் ஆண்டு சிந்தர் சி இயக்கத்தில் பிரசாந்த் நடிப்பில் வெளியான படம் வின்னர். இப்படத்தில், கிரண், வடிவேலு, விஜயகுமார், நம்பியார் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.


இப்படம் ரசிகர்கள் மத்தியில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. வடிவேலு காமெடி அல்டிமேட்டாக அமைந்தது. காமெடி கலந்த ஆக்‌ஷனில் பிரசாந்த் கலக்கியிருப்பார். வடிவேலுவுடன் அவர் அடிக்கும் லூட்டி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. பிரசாந்த் வடிவேலு கூட்டணியில் சுந்தர் சி தனக்கே உரிய காமெடி கலக்கல் திரைப்படத்தை இயக்கியிருந்தார் என்றால் அது மிகையல்ல.


இந்நிலையில் வின்னர் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட்டுக்கு ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். காரணம், சமீபத்தில் சுந்தர் சி – பிரசாந்த் – வடிவேலு ஆகிய மூன்று பேரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. எனவே வின்னர் 2 அப்டேட்டும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தற்போது மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகம், கலகலப்பு மூன்றாம் பாகம் என பிஸியாக இருக்கிறார் சுந்தர் சி. இவை முடிந்ததும் வின்னர் 2ஆம் பாகம் அறிவிப்பு வெளியாகும் என கூறப்ப்டுகிறது.


கடந்த காலத்தில் கொடி கட்டி பறந்த நடிகர்களில் டாப் லெவலில் இருந்தவர் நடிகர் பிரசாந்த். வைகாசி பொறந்தாச்சு என்ற தமிழ் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான பிரசாந்த் அடுத்தடுத்து பல வெற்றிப்படங்களை கொடுத்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். அதுமட்டுமல்லாமல் செம்பருத்தியில் தொடங்கி ஆணழகன், ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி, சாக்லெட், தமிழ், மஜ்னு, குட்லக், அப்பு, பிரியாத வரம் வேண்டும் என பல திரைப்படங்கள் மூலம் ரசிகைகளின் மனதை கொள்ளை கொண்டார்.


வின்னர் திரைப்படம் காமெடி கலந்த ஆக்‌ஷன் படமாகவும் திருப்புமுனையை ஏற்படுத்திய படமாகவும் பிரசாந்துக்கு அமைந்தது.