மாஸ் திரைப்படங்களை பட்டியலிட்டால் அதில் ரட்சகன் திரைப்படமும் இருக்கும். நாகர்ஜூனாவின் நரம்பு புடைக்கும் சீனை எல்லாம் நரம்பு புடைக்க திரையில் பார்ப்பார்கள் ரசிகர்கள். இன்றளவும் ரட்சகன் படத்துக்கும், பாடலுக்கும் தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. அந்த திரைப்படத்தை இயக்கியவர் இயக்குநர் பிரவீன் காந்தி. இவர் ரட்சகன், ஜோடி, ஸ்டார், துள்ளல், புலிப்பார்வை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். அவர் இயக்கிய சில படங்களில் நடிக்கவும் செய்வார். இந்நிலையில் தன்னுடைய திரை அனுபவம் குறித்தும், தமிழ் சினிமாத்துறை குறித்தும் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அவர் பேசியுள்ளார். அதில் பல விஷயங்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.


''எனக்கு அடுத்து அடுத்து என்ற பரபரப்பாக படம் செல்வதே பிடிக்கும். எந்த இடத்திலும் படம் தேங்கக் கூடாது. க்ளைமேக்ஸில் 7 நிமிட பாட்டு வைத்தால் சரியாக இருக்காது. என்னுடைய படத்தில் எல்லாம் தேக்கமே இருக்காது. வேறு மிஸ்டேக் இருக்கலாம். ஆனால் ஒருவித தேக்கம் இருக்காது. போர் அடிக்கிறான்பா என்று சொல்ல வாய்ப்பே இல்லை. ரட்சகன் படத்தின் க்ளைமேக்ஸ்  பாடலை டைட் செஞ்சி மூன்றரை நிமிடத்தில் முடித்தேன். அப்போது ரஹ்மானிடம் போட்டுக்கொடுத்துவிட்டார்கள் சிலர். 




ரஹ்மான் அதையும் கண்டுகொள்ளவில்லை. படம் ஹிட், பாட்டு ஹிட் விடுங்கள் என சொல்லிவிட்டார்.  ஜீவா படத்தில் அஞ்சாதே ஒரு பாட்டில் மட்டும் மீசை வைத்தார். அது பிரசாந்தின் செண்டிமெண்ட். எனக்கும் பிரசாந்துக்கும் ஸ்டார் படத்தில் ஒரு க்ளாஸ் ஆகிவிட்டது. நானும் நடிப்பேன், படத்தையும் கெடுப்பேன் என சிலர் கிளப்பிவிட்டார்கள். படம் கதை சொல்லும் போதே நானும் நடிப்பேன் என சொல்லிவிடுவேன். ஷங்கர் பாட்டுக்கு பாட்டு எட்டிப்பார்ப்பார். நான் அதைக் கூட செய்யாமல் இருந்தேன்.  ஆனால் என்னை நடிக்கத் தூண்டியது


இயக்குநர் அகத்தியன் தான். நடிப்பு தொடக்க புள்ளி  அவர்தான். என்னைப் பார்த்து கார்த்தி மாதிரி இருக்கேன் என்றார். அங்கிருந்து நான் நடிக்கவும் தொடங்கிவிட்டேன். அதற்கு பின்புதான் ஏழரை தொடங்கிவிட்டது. ஆனால் திரைத்துறையைப் பொருத்தவரை ஒருவனுடைய பெரிய வளர்ச்சி புடிக்காது. எங்கடா தவறு செய்வான் என காத்துக்கொண்டே இருப்பார்கள். விஜயிடமே நான் கதை சொன்னேன். நீங்களே நடிக்கலாமே என்றார் அவர். அந்த அளவுக்கு என்னைப் பற்றி போட்டுக்கொடுத்துள்ளார்கள். நான் ஏற்கெனவே 2 கதை விஜயிடம் சொல்லி இருந்தேன். ஆனால் பண்ணவில்லை. அதேபோல் அஜித்திடமும் படம் பண்ண வேண்டியது. தவறிவிட்டது'' என்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண