நடிகர் தனுஷ் கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என தனது நடிப்பால் ஆல்ரவுண்டராக இருப்பவர். சுள்ளான் என்று தான் ஆரம்பகாலங்களில் அறியப்பட்டார். ஆனால் கடுகு சிறுத்தாலும்கூட காரம் குறையாது என்பதுபோல் அவரின் நடிப்புத்திறன் அத்தனை அபாரமானது. நடிப்பில் தனுஷ் ஓர் அசுரன் தான்.


தனுஷின் நடிப்பை சிலாகித்து பிரசன்னா ஒரு ஆடியோ ரிலீஸ் விழாவில் பேசியது இப்போதும் கவனம் ஈர்த்துக் கொண்டிருக்கிறது. அது பவர்பாண்டி திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா.


பவர்பாண்டி திரைப்படம் தனுஷ் இயக்கத்தில் உருவான திரைப்படம். இதில் இளமைக்கால தனுஷாக தனுஷ், அவருக்கு ஜோடியாக மடோனா சபாஸ்டின் நடித்திருப்பர். வயதான தனுஷாக ராஜ்கிரன், அவருக்கு இணையாக ரேவதி நடித்திருப்பர். சாயாசிங், பிரசன்னா, டிடி, நட்புக்காக ரோபோ சங்கர், கவுதம் வாசுதேவ் மேனன் என நடிகர்கள் பட்டியல் என்னவோ குறைவு தான். ஆனால் பெயருக்கு ஏற்ற மாதிரி அந்தப் படம் பவர் பேக்ட் ஃபிலிம்.


அந்தப் படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவில் பிரசன்னா பேசியதாவது:


தனுஷ் இதை யாரும் உங்களிடம் சொல்லியிருக்க மாட்டார்கள். ஆனால் நான் வெளிப்படையாகச் சொல்கிறேன். உங்கள் மீது எனக்கு அப்படியொரு பொறாமை. உங்கள் நடிப்புத்திறனைப் பார்த்து நான் லைட்டா காண்டாவேன். உங்களின் வெற்றியைப் பார்த்து பொறாமைப் படுவேன். ஆனால், இந்த வெற்றிக்கு நீங்கள் தகுதியானவர் என்பதை உங்களுடன் பணியாற்றியபோது தெரிந்து கொண்டேன். தனுஷ் நினைத்திருந்தால் ஒரு மாஸ் படம் இயக்கி, அதில் அவரே 5.,6 ரோலில் நடித்திதிருக்கலாம். ஆனால், என்னை நடிக்க வைத்தார். அவருடன் பணியாற்றியதில் நான் நடிப்பைக் கற்றுக் கொண்டேன். ஒவ்வொரு நாளும் எனக்கொரு பாடம் கிடைத்தது. நான் நடிக்கும்போது என் அப்பாவாக நடித்த ராஜ்கிரண் சாரைப் பார்க்கும்போது புருவத்தைத் தூக்கி நடிப்பேன். அவர் ஒவ்வொரு முறையும் பொறுமையாக சொல்லிக் கொடுப்பார். பிரசன்னா உங்களுக்கு அப்பா மேல கோபம் தானே தவிர வெறுப்பு இல்லை. அதனால் புருவத்தை நகர்த்தாம நடிங்க என்பார்.


உண்மையில் சொல்ல வேண்டுமென்றால், நான் இந்தப் படத்தை ஒப்புக்கொள்ள அவ்வளவு ஈகோவோட இருந்தேன். அப்புறம் என் மனைவி சொன்னாங்க முதலில் படத்தின் கதையைக் கேளுங்கள் என்றார். கதையைக் கேட்டு அப்படியே அசந்து போய்விட்டேன். இந்தப் படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்ததற்கு மிக்க நன்றி. படத்தில் ராஜ்கிரண் சார் நடிப்பையும், ஸ்பாட்டில் அவருடைய பணிவையும் கண்டு நான் வியந்தேன். இத்தனைப் பெரிய நடிகருக்கு அவ்வளவு பணிவா என்று அசந்து போனேன்.


இவர் தனுஷின் நடிப்பையும், திறமையையும் சிலாகித்துப் பேசினார் தனுஷ்.