நடிகர் பிரகாஷ் ராஜின் தாயார் ஸ்வர்ணலதா இன்று தனது 86 வயதில் வயது மூப்பின் காரணமாக காலமாணார். தென் இந்திய திரை பிரபலங்கள் அஞ்சலி தெரிவித்து வருகிறார்கள். ஸ்வர்ணலதா அவர்களின் உடல் பெங்களூரில் பிரகாஷ் ராஜ் இல்லத்தில் இறுதி அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. நாளை இறுதி சடங்குகள் நடைபெற இருக்கின்றன.
இந்திய மொழிகளில் கிட்டதட்ட 7 மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் நடிகர் பிரகாஷ் ராஜ். இவர் 1965 ஆம் ஆண்டு ஸ்வர்ணலதா மற்றும் மஞ்சு நாத் ராஜூக்கு மூத்த மகனாக பிறந்தார். பிரகாஷ் ராஜின் தாயார் ஸ்வர்ணலதா ஒரு குறித்தவ குடும்பத்தில் பிறந்தவர் . சிறிய வயதில் ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்தார். படிப்பு முடித்து நர்ஸிங் பயின்று வந்தார். அப்போது சிகிச்சைக்காக வந்த மஞ்சுநாத் என்கிற இந்துவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். குடும்ப வறுமையை சமாளிக்க பிரகாஷ் ராத் மாதம் ரூ 300 சம்பளத்திற்கு மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். கிட்டதட்ட 2000 வீதி நாடகங்களில் அவர் நடித்துள்ளார்.
நடிகர் , தயாரிப்பாளராக மட்டுமில்லாமல் அரசியல் களத்திலும்ம் தொடர்ச்சியாக தனது கருத்துக்களை முன்வைத்து வருகிறார். சிறு வயதில் இருந்தே தனது குடும்பத்தில் பல்வேறு கலாச்சாரங்களை பயிலும் சூழல் இருந்ததே தனக்குள் முற்போக்கான அரசியல் பார்வை வளர்வதற்கான காரணம் என பிரகாஷ் ராஜ் தனது அன்னை குறித்து தெரிவித்துள்ளார்.
