நடிகர் விஜய்யுடன் வாரிசு படத்தில் நடிப்பது குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் நேர்காணல் ஒன்றில் கருத்து தெரிவித்துள்ளார். 


தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படம் வாரிசு. விஜய்யின் 66வது படமாக உருவாகி வரும் இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம்,சங்கீதா, ஜெயசுதா, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளது. குடும்ப கதையாகி உருவாகி வரும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தெலுங்கின் மிகப்பெரிய தயாரிப்பாளரான தில் ராஜூ தயாரிக்கிறார். 






இதனிடையே சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய சரத்குமார், வாரிசு படம் சிறப்பாக வந்து கொண்டிருக்கிறது. ஆடியன்ஸ் படத்தோடு கனெக்ட் ஆகும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.விஜயின் பெர்பாமன்ஸ் வேறு லெவலில் இருக்கிறது. வாரிசு முழுக்க முழுக்க எண்டெர்டெயின்மெண்ட் படமாக இருக்கும். பாடல், சண்டை, செண்டிமெண்ட் காட்சிகள் என எல்லா எமோஷனும் இந்தப்படத்தில் இருக்கும் என குறிப்பிட்டு இருந்தார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது. 






இந்நிலையில் வாரிசு படத்தில் நடிப்பது குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் நேர்காணல் ஒன்றில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் செல்லத்துடன் (விஜய்) 15 வருடத்திற்கு பிறகு நடிக்கிறேன் என நினைக்கிறேன். நீண்ட இடைவெளி விழுந்து விட்டது. படத்தின் கதையை சொல்லணுமா இல்லையோ என தெரியாது. ஆனால் செல்லம் வி ஆர் பேக் என பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார். விஜய்யும் பிரகாஷ்ராஜூம் இணைந்து நடித்த கில்லி, போக்கிரி, சிவகாசி, வில்லு ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண