கே.ஜி.எஃப் புகழ் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடித்துள்ள திரைப்படம் 'சலார்'. ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ் மற்றும் ஜெகபதி பாபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ரவி பர்சூர் இசையமைத்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பான் இந்தியன் படமாக உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் இந்த ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பு ஏற்கனவே வெளியானது. 


சலார் ட்ரைலர் :


முதல் முறையாக டார்க் சென்ட்ரிக் தீம் என்ற புதிய தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி இப்படத்தின் ஒளிப்பதிவு பணிகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் 'சலார்' திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது. கடந்த மாதம் படக்குழு வெளியிட்ட தகவலின் படி ஆகஸ்ட் மாத இறுதியில் 'சலார்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. 


 



ட்ரைலர் ஒத்திவைப்பு :


அதனால் மிகுந்த எதிர்பார்ப்போடு ட்ரெய்லருக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் அழைக்கும் வகையில் அறிவிப்பு ஒன்றை தற்போது ஹொம்பலே பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. . சில தவிர்க்க முடியாத காரணங்களால் ட்ர்ய்லர் ரிலீஸ் தேதி தற்போது ஒத்திவைத்துள்ளதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி வருகிறது. எனவே செப்டம்பர் முதல் வாரத்தில் ட்ரெய்லர் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுவதாகக் கூறப்படுகிறது. 


ட்ரெய்லரை சொன்ன தேதியில் ரிலீஸ் செய்ய முடியாமல் போனதால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது போல சலார் திரைப்படம் சொன்னபடி செப்டம்பர் 28 வெளியாகுமா அல்லது அதுவும் தள்ளிபோகுமா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. விரைவில் படக்குழு இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.