நடிகர் பார்த்திபன் இளையராஜா கம்போஸிங் செய்யும் வீடியோவை பகிர்ந்திருக்கிறார். 


நடிகர் பார்த்திபன் தனி நபராக எழுதி, இயக்கி நடித்த திரைப்படம்  ‘ஒத்த செருப்பு சைஸ் 7’. விமர்சன ரீதியாக  பெரிதும் கவனிக்கப்பட்ட இந்தத் திரைப்படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருந்தார். பாடல்களுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்த நிலையில், பின்னணி இசையை இசையமைப்பாளர் சி. சத்யா செய்திருந்தார். 


இந்த படத்திற்கு கடந்த ஆண்டு சிறப்பு தேசிய விருது வழங்கப்பட்டது. அதே போல இந்தப்படத்திற்கு ஒலியமைப்பு செய்த ரசுல் பூக்குட்டிக்கும் சிறந்த ஒலியமைப்புக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. இந்தப்படம் ஹிந்தியிலும் ரீமேக் ஆகிறது.


பிரபல நடிகரான அபிஷேக் பச்சன் இந்தப்படத்தில் நடித்திருக்கிறார். படத்தை அமிதாப் பச்சன் தயாரித்துள்ளார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இந்தப்படத்தின் இசைக் கோர்ப்பு சம்பந்தமான பணிகள் தொடங்கியதாக தெரிகிறது.


இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் பார்த்திபன், “  ஹிந்தியின் பின்னணி இசை கோர்ப்பில். மறுபுறம் ARR-ரின் இசையில் இரவின் நிழல். இசைபட வாழ்தல் அர்த்தப்பட..
புகழ் விற்று பொருள் ஈட்டாமல், இன்னும் பெற உழைப்பதன் பெருமை காண்கிறேன். Oscar nominations அறிவித்த போது உச்சரிக்கப்பட்ட பெயர்களின் உச்சபட்ச உற்சாகம் ரூபாய்,டாலர்,பவுண்டில் அடங்காது.” என்று பதிவிட்டுள்ளார். 


 






ஒத்த செருப்பு படத்தை தொடர்ந்து பார்த்திபன் இயக்கி நடித்திருக்கும் திரைப்படம்  ‘இரவின் நிழல்'. சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டிருக்கும் இந்தத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். அண்மையில், இந்தப்படத்தில் ஆஸ்கர் விருதுகளை வென்ற கட்டா லங்கோ லியோன் என்பவர் விஷுவல் எபெக்ட்ஸ் மேற்பார்வையாளராகவும், கிரைக் மான் என்பவர் சவுண்ட் டிசைன் பணிக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.