Actor Vijay: மைனஸ் 10 டிகிரி குளிரில் லியோ ஷூட்டிங்.. விஜய்யின் டெடிகேஷனை பார்த்து மிரண்ட நடிகர் நாசரின் தம்பி ஜவஹர்..!

லியோ பட ஷூட்டிங்கில் நடிகர் விஜய்யின் டெடிகேஷனை பார்த்து பிரமித்து போனேன் என நடிகர் நாசரின் தம்பியான ஜவஹர் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

லியோ பட ஷூட்டிங்கில் நடிகர் விஜய்யின் டெடிகேஷனை பார்த்து பிரமித்து போனேன் என நடிகர் நாசரின் தம்பியான ஜவஹர் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

பெரும் எதிர்பார்ப்பில் லியோ படம் 

இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் நடிகர் விஜய் 2வது முறையாக இணைந்துள்ள படம் “லியோ”.  செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லியோ படத்தில் த்ரிஷா, சஞ்ஜய் தத், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த், அர்ஜுன், மன்சூர் அலிகான்,மேத்தியு தாமஸ்,ஜோஜூ ஜார்ஜ், மடோனா செபாஸ்டியன், அனுராஜ் காஷ்யப், இயக்குநர்கள் கெளதம் மேனன், மிஷ்கின், ஜவஹர் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படம் அக்டோபர் 19 ஆம் தேதி திரைக்கும் வரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை ஒரு பாடலும், 3 கேரக்டர்களின் அறிமுகமும் வெளியாகியுள்ளது.

லியோவில் நடிகர் நாசரின் தம்பி 

இதனிடையே லியோ படத்தில் நடிகர் நாசரின் தம்பி ஜவஹர் நடித்துள்ளார். அவர் நேர்காணல் ஒன்றில் லியோ படம் பற்றி பல தகவல்களை தெரிவித்துள்ளார். அதில், “ஒருநாள் லியோ படத்துக்காக போன் வந்துச்சு. அதில் இந்த மாதிரி லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் வாய்ப்பு வந்துருக்கு, பண்றீங்களா? என கேட்டார்கள்.  சில பேர் போலி கால் பண்ணுவாங்க என்பதால் முதலில் நம்பவில்லை. அவங்க முகவரி எல்லாம் கொடுத்த பிறகு கன்ஃபார்ம் பண்ண பிறகு தான் போனேன்.

கதையை சொன்னார்கள். நிறைய தேதிகள் வேண்டும் என கேட்டார். நானும் சரி என சொல்லிவிட்டு வந்து விட்டேன்.என்னை நிறைய பேர் ஆடிஷனுக்கு கூப்பிடுவார்கள். அதன்பிறகு நடிக்க அழைக்காமல் இருந்திருக்கிறார்கள் என்பதால் லியோ படம் பற்றி யாரிடமும் பேசவில்லை.

நான் ஒரு வாரம் கழித்து கால் செய்து பார்த்தேன், எடுக்கவில்லை என்பதால் விட்டுவிட்டேன். பின்னர் ஒருநாள் போன் செய்து, விமான டிக்கெட் புக் செய்ய வேண்டும் என சொன்னதும் மகிழ்ச்சியாக இருந்து. என் தொடர்பான காட்சிகள் கொடைக்கானலில் எடுக்கப்பட இருந்தது. கிட்ட 500 பேருக்கும் மேலான படக்குழுவினர் அங்கு சென்ற நிலையில் வனத்துறையினர் அனுமதி கொடுக்கவில்லை. எனக்கு கொஞ்சம் அதிருப்தியாகி விட்டது. அதன்பிறகு காஷ்மீர் போறோம் என சொன்னார்கள்.

திருவிழா கோலம் பூண்ட ஷூட்டிங் ஸ்பாட் 

கிட்டதட்ட ஷூட்டிங் ஸ்பாட் திருவிழா கோலம் பூண்டது என்றே சொல்லலாம். தமிழ் சினிமாவை சேர்ந்தவர்கள், காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என கிட்டதட்ட 2 ஆயிரம் பேர் வரை அங்கு இருப்பார்கள்.  நிறைய பேரு என்னை நாசர் என்ன நினைத்து ஆட்டோகிராஃப் வாங்கினார்கள். விஜய்யுடன் ஒரு காட்சியில் இருந்தாலும், பெரிய அளவில் பேசவில்லை. காரணம் அங்கு மைனஸ் 10 டிகிரி அளவில் குளிர் நிலவியது. நாங்கள் எல்லாம் குளிருக்கான ஆடைகள் அணிந்து இருந்தோம்.

அப்படி எதுவும் விஜய்க்கு இல்லை. டி ஷர்ட் மட்டுமே அணிந்திருந்தார். அப்படிப்பட்ட காட்சி அது. அதனால் விஜய் ஷூட்டிங் வரும்போதே ஸ்வெட்டர் எதுவும் அணியாமல் இருந்திருந்தார். அவர் நினைத்திருந்தால் காட்சி எடுக்கப்படும்போது  மட்டும் ஸ்வெட்டர் அணியாமல் இருந்திருக்கலாம். குளிரை தாங்கி கொண்டு அவ்வளவு அழகாக நடித்தார். விஜய்யின் டெடிகேஷனை கண்டு வியந்து தான் போனேன். நான் முதன்முதலாக லோகேஷ், விஜய்யை சந்தித்தேன். மிகவும் மரியாதையாக நடத்தினர். லியோ படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி முதலில் மலேசியாவில் நடத்த முடிவு செய்யப்பட்டு பின்னர் சென்னைக்கு மாற்றப்பட்டது. தேதியை தயாரிப்பு நிறுவனம் இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் சமூக வலைத்தளங்களில் ஏதேதோ தேதி எல்லாம் சொல்கிறார்கள் என நடிகர் ஜவஹர் தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க: Sasikala Warrant: சசிகலா, இளவரசிக்கு பிடிவாரண்ட்.. பெங்களூரு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...

Continues below advertisement
Sponsored Links by Taboola