பிரபல தெலுங்கு நடிகர் நரேஷ் 60 வயதில் நடிகை பவித்ரா லோகேஷை திருமணம் செய்துக் கொண்ட வீடியோ, புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
மகேஷ்பாபுவின் அண்ணன்
தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் மகேஷ் பாபு. இவரது அண்ணன் நரேஷ் பாபு 1970 ஆம் ஆண்டுகளில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களிடம் பிரபலமானார். இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர் நரேஷ் முதலில் மூத்த நடன மாஸ்டர் ஸ்ரீனுவின் மகளை மணந்தார். இந்த தம்பதியினருக்கு நவீன் விஜய்கிருஷ்ணா என்ற மகன் பிறந்த நிலையில் இருவரும் பிரிந்தனர்.
இதனைத் தொடர்ந்து 2வதாக திரைப்பட பாடலாசிரியர் தேவுலபள்ளி கிருஷ்ண சாஸ்திரியின் பேத்தி ரேகா சுப்ரியாவை மணந்தார். இவர்களுக்கு தேஜா என்ற மகனும் உள்ள நிலையில் ரேகா சுப்ரியாவை பிரிந்தார். தொடர்ந்து 50 வயதை தாண்டிய நிலையில், தன்னை விட 20 வயது சிறியவரான ரம்யா ரகுபதியை நரேஷ் திருமணம் செய்துக் கொண்டார்.
ஆனால் சமீப காலமாக இவர்கள் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இதனால் கன்னட நடிகை பவித்ரா லோகேஷைவுடன் தொடர்பில் இருப்பதாகவும், நரேஷ் அவரை திருமணம் செய்துக் கொள்ளப்போவதாகவும் தகவல் வெளியானது. கடந்தாண்டு ஜூலை மாதம் நடிகை பவித்ராவும் நரேஷும் மைசூரில் பிரபல ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தார்கள்.
செருப்பால் அடிக்கச் சென்ற முன்னால் மனைவி
இதனைத் தெரிந்துக் கொண்ட ரம்யா ரகுபதி இருவரையும் கையும் களவுமாக பிடித்ததோடு மட்டுமல்லாமல், ஊழியர்களின் உதவியுடன் அறையினுள் நுழைய முற்பட்டார். ஆனால் நரேஷோ கொஞ்சம் கூட இதனைப் பொருட்படுத்தாமல் விசில் அடித்துக்கொண்டு, சிரித்துக்கொண்டே சென்றார். இதனால் ஆத்திரமடைந்த ரம்யா நரேஷை செருப்பால் அடிக்க முயன்ற வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது.
இந்நிலையில் தான் பவித்ரா லோகேஷை நரேஷ் நான்காவதாக திருமணம் செய்துள்ளார். இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. ஆனால் நரேஷ் தனது மூன்றாவது மனைவியான ரம்யா ரகுபதியிடம் இருந்து இன்னும் சட்டப்படி விவாகரத்து பெறவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. நரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது திருமண வீடியோவை வெளியிட்டு, “எங்களின் இந்த புதிய பயணத்தில் அமைதி மற்றும் மகிழ்ச்சி வாழ்நாள் முழுவதும் இருக்க உங்கள் ஆசீர்வாதங்கள் தேவை” என தெரிவித்துள்ளார்.
அதேசமயம் நடிகை பவித்ராவுக்கும் இது3வது திருமணம் ஆகும். முதலில் மென் பொறியாளர் ஒருவரையும், பின்னர் கன்னட திரைப்பட நடிகர் சுசேந்திர பிரசாத்தையும் திருமணம் செய்து பிரிந்த அவர் நரேஷூடன் 2021 ஆம் ஆண்டு முதல் உடனிருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.இந்த திருமணம் தெலுங்கு திரையுலகில் பெரும் புயலை கிளப்பியிருந்தாலும் ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை திருமண ஜோடிக்கு தெரிவித்துள்ளனர்.