தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் நானி. இவருக்கு தெலுங்கு மட்டுமின்றி தமிழ், மலையாளத்திலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவரது நடிப்பில் தற்போது ஹிட் 3 என்ற படம் வெளியாக உள்ளது. 

பாட்டுப் பாடிய நானி:

த்ரில்லர் திரைப்படமான இந்த படம் தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ஹிட் 1, ஹிட் 2 படங்களின் வரிசையில் உருவாகியுள்ள படம் ஆகும். இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடிகர் நானி என்னவளே.. அடி என்னவளே பாடலைப் பாடி அசத்தியுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. 

ஹிட் 3:

2022ம் ஆண்டு வெளியான ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தின் முடிவிலே ஹிட் 3ம் பாகத்திற்கான ஹீரோ நானி என்று அறிவிக்கப்பட்டிருக்கும். அதற்கான காட்சியும் அந்த படத்தில் இருக்கும். 

இந்த படத்தை சைலேஹ் கோலானு இயக்கியுள்ளார். இந்த படத்தை பிரசாந்தி  திபிர்னேனி மற்றும் நடிகர் நானி தயாரித்துள்ளனர். இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். சானு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கார்த்திகா சீனிவாஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  மிக்கி ஜே மேயர் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் மே 1ம் தேதி ரிலீஸ் ஆகிறது. 

எதிர்பார்ப்பு:

சுமார் 60 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் காவல்துறை அதிகாரியாக நானி நடித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் நடக்கும் தொடர் கொலைகள் குறித்து விசாரிக்கும் அதிகாரியாக இந்த படத்தில் அர்ஜுன் சர்கார் கதாபாத்திரத்தில் நானி நடித்துள்ளார். இந்த படம் தெலுங்கு மட்டுமின்றி தமிழிலும் நேரடியாக ரிலீசாகிறது. 

நானி தமிழில் நேரடியாக வெப்பம் என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் அவர் நடித்த நான் ஈ படம் மாபெரும் வெற்றிப்படமாக தமிழிலும் அமைந்தது. தமிழிலும் தனக்கென்று மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் நானிக்கு இருப்பதால் ஹிட் 3 படம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.