நானி நடித்துள்ள ஹிட் 3
தமிழ் , தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தொடர்ச்சியாக நடித்து வருபவர் நானி. தற்போது அவர் நடித்துள்ள ஹிட் 3 திரைப்படம் வரும் மே 1 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. சைலேஷ் கொலனு இப்படத்தை இயக்கியிருக்கிறார். கே.ஜி.எஃப் புகழ் ஶ்ரீநிதி ஷெட்டி இந்த படத்தில் நாயகியாக நடித்துள்ளார். ஹிட். 3 படத்தின் ப்ரோமோஷனுக்காக நானி சென்னை வந்துள்ளார். படம் குறித்தும் தமிழ் சினிமா குறித்தும் பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை பேசி வருகிறார். அந்தவகையில் நேர்காணல் ஒன்றில் கார்த்தியின் மெய்யழகன் படத்தை புகழ்ந்து பேசியுள்ளார் நானி.
மெய்யழகன் படத்தை புகழ்ந்த நானி
பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி அரவிந்த் சாமி நடித்து கடந்த ஆண்டு வெளியான படம் மெய்யழகன். சமீபத்தில் சமீபத்தில் தான் பார்த்த படங்களைப் பற்றி பேசியபோது நானி இப்படி கூறினார் " தமிழ் சினிமாவில் மட்டுமில்லை கடந்த பத்தாண்டுகளில் நான் பார்த்த சிறந்த படம் என்றால் அது மெய்யழகன் தான். அது ஒரு மேஜிக்கல் சினிமா. நீங்கள் செட் அமைத்து ஆயிரம் கோடி செலவிடலாம் ஆனால் இந்த படம் ஒரு தனி மேஜிக். இவ்வளவு பர்சனலான ஒரு படத்தை எடுப்பது என்பது சாத்தியமில்லாதது. இந்த மாதியான காலத்தை கடந்த ஒரு படத்திற்கு கார்த்தி அரவிந்த் சாமிமேல் எனக்கு பெரிய மரியாதை வந்திருக்கிறது. படம் பார்த்து கார்த்தியிடம் படம் எனக்கு எவ்வளவு பிடித்திருந்தது என்று சொன்னேன். அந்த படத்தைப் பற்றி நினைத்தாலே நான் சந்தோஷமாகி விடுவேன்" என நானி தெரிவித்துள்ளார்