Nani 30:நானியுடன் இணையும் ‘சீதா ராமம்’ மிருணாள் தாகூர்?..எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

நானியின் 30 ஆவது படத்தில் அவருக்கு ஜோடியாக சீதா ராமம் திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதை வென்ற மிருணாள் தாகூர் நடிக்க விருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Continues below advertisement

டி.வி தொகுப்பாளராக இருந்து தெலுங்கு திரையுலகில் முத்திரை பதித்த நானி, தமிழ் திரையுலகில் 'நான் ஈ' திரைப்படம் மூலம் பிரபலமானவர். இவர் நடிப்பில் இந்தாண்டு வெளியான படம் 'அன்டே சுந்தரநிக்கி'; இத்திரைப்படம் தமிழிலும் 'அடடே சுந்தரா' என்ற பெயரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Continues below advertisement

எக்ஸ்பிரஷென் குயின் 'நஸ்ரியா' விற்கு இத்திரைப்படம் திருமண இடைவெளிக்கு பிறகு ஒரு கம்பேக் ஆக அமைந்தது. 2021 இல் நானி நடிப்பில் வெளியான 'ஷ்யாம் சிங்கா ராய் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று, சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. அதே போல கடந்த 2019 ஆம் ஆண்டு இவரின் நடிப்பில் வெளியான ஜெர்சி திரைப்படமும் இந்தாண்டு ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது; ஷாகித் கபூர்,மிருணாள் தாகூர் ஆகியோர் நடித்திருந்த இந்தப்படம் அங்கு எதிர்பார்த்த வரவேற்பை பெற வில்லை;

                                     

தற்போது நானி  'தசரா' திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்; இத்திரைப்படத்தில் நானிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கி வரும் இந்தப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

இத்திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனை தொடர்ந்து நானி நடிக்கும் 'நானி30' படத்தில் நானிக்கு ஜோடியாக சீதா ராமம் திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதை வென்ற மிருணாள் தாகூர் நடிக்க விருக்கிறார் என கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது; மிருணாள் தாகூர் சீதா ராமம் திரைப்படம் மூலம் மக்களிடையே பெரிதளவில் பரிட்சையமானாலும், அதற்கு முன்பே நாடகங்களில் நடித்து மக்கள் மனதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola