மெய்யழகன்


மெய்யழகன்


பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி , அரவிந்த் ஸ்வாமி நடித்து கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியான படம் மெய்யழகன். தேவதர்ஷினி , ஜெயபிரகாஷ் , ராஜ்கிரண் , ஶ்ரீதிவ்யா , கருணாகரன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். சூர்யா ஜோதிகா இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார்கள். 


உறவுகளுக்கு இடையில் ஏற்படும் பிரச்சனைகளால், தான் வாழ்ந்த வீட்டை விற்று தஞ்சாவூரில் இருந்து சென்னைக்கு புறபட்டு செல்கிறார் அருள்மொழிவர்மன் (அரவிந்த்சுவாமி). வருடங்கள் கழித்து தனது சித்தப்பாவின் மகள் திருமணத்திற்கு மீண்டும் ஊருக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. சொந்த ஊரை விட்டு பிரிந்த ஏக்கம் மனதில் இருந்தாலும், உறவுக்காரர்கள் மீது ஏற்பட்ட கசப்பால், விருப்பமில்லாமல் கிளம்பிச் செல்கிறார் அருள்.


கல்யாணத்திற்கு சென்று தலையை காட்டிவிட்டு இரவே பஸ் பிடித்து சென்னைக்கு திரும்பி வருவதுதான் திட்டம். ஆனால் ஊரில் அவரை சந்திக்கும் கார்த்தி  அத்தான்.. அத்தான்.. என அருளை சுற்றிச்சுற்றி வருகிறார் . அருளுக்கு கார்த்தியை சுத்தமாக நினைவில் இல்லை. இதை எப்படி கேட்பது என தயக்கப்பட்டு சரி ஊருக்குப்போகும் வரை தெரிந்தமாதிரியே காட்டிக்கொண்டு சமாளித்துவிட்டு கிளம்பிவிடலாம் என்று நினைக்கிறார் அருள். உறவுகளின் முக்கியத்துவம் தொடங்கி ஜல்லிகட்டு , ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு என பல்வேறு விஷயங்களைப் பற்றிய உரையாடல்கள் வழி நம்மை எங்கேஜ் செய்கிறது மெய்யழகன் படம்.


மெய்யழகன் படம் பார்த்து  நாகர்ஜூனா


மெய்யழகன் படத்தைப் பார்த்த பல்வேறு நட்சத்திரங்கள் படத்தை பாராட்டி வருகிறார்கள். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் இப்படம் பெரியளவில் வரவேற்பைப் பெற்று வருகிறது. தற்போது நடிகர் நாகர்ஜூனா மெய்யழகன் படத்தைப் பார்த்து படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்






தனது எக்ஸ் தளத்தில் நாகர்ஜூனா இப்படி கூறியுள்ளார் " என்புள்ள கார்த்தி , மெய்யகழன் படம் பார்த்தேன். உங்களையும் அரவிந்த் ஸ்வாமியையும் பார்க்கும் போது என் முகத்தில் ஒரு சிறு புன்னகை இருந்துகொண்டே தான் இருந்தது. படம் முடிந்து அதே புன்னகையுடன் துங்கச் சென்றேன். இந்த படம் என் சிறு வயதை நினைவுக்கு கொண்டு வந்தது. மேலும் தோழா படத்தில் நாம் இருவரும் நடித்த அனுபவங்களையும் தான். இப்படத்தைப் பற்றி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் பாராட்டி எழுதுவதைப் பார்க்கையில் மகிழ்ச்சி அடைகிறேன். மெய்யழகன் படக்குழுவிற்கு என்னுடைய வாழ்த்துகள்" என நாகர்ஜூனா தெரிவித்துள்ளார்.