நாகர்ஜூனா 100

பல வருடங்களுக்குப் பின் ரஜினியின் கூலி படத்தின் வழி தமிழுக்கு ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார் நாகர்ஜூனா. கூலி படத்திற்கு பரவலாக நெகட்டிவ் விமர்சனங்கள் வெளியானாலும் நாகர்ஜூனாவின் தோற்றம் மற்றும் கெட் அப் பலரை கவர்ந்தது. லோகேஷ் கனகராஜ் நாகர்ஜூனாவை டம்மி செய்துவிட்டதாக பலர் கூறி வருகிறார்கள்.  1997 ஆம் ரட்ச்சகன் படத்தில் தமிழ் ரசிகர்களை கவர்ந்த நாகர்ஜூனா இன்றும் இளமையும் ஸ்டைலும் மாறாமல் இருப்பதை பலர் வியந்து பாராட்டி வருகிறார்கள். இப்படியான நிலையில் கூலி படத்தைத் தொடர்ந்து மீண்டும் தமிழ் இயக்குநருடன் தனது 100 ஆவது படத்தை அறிவித்துள்ளார் நாகர்ஜூனா. 

ரா காத்திக் இயக்கும் நாகர்ஜூனா 100

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய நாகர்ஜூனா. தனது 100 ஆவது படத்தைப் பற்றி தகவலை வெளியிட்டார். அசோக் செல்வன் இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு ஓடிடியில் வெளியான நித்தம் ஒரு வானம் படத்தை இயக்கிய ரா கார்த்திக் இந்த படத்தை இயக்கப் போகிறார். ஆக்‌ஷன் , ஃபேமிலி டிராமா கலந்த படமாக இப்படம் இருக்கும் என்றும் இதில்  நான் தான் நாயகன் என நாகர்ஜூனா தெரிவித்துள்ளார்

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள கூலி படத்தில் ரஜினி , நாகர்ஜூனா  , உபேந்திரா  , சத்யராஜ்  , செளபி சாஹிர் , ஸ்ருதி ஹாசன் , சார்லீ , கண்ணா ரவி , இயக்குநர் தமிழ் , ரிஷி , உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியான கூலி திரைப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ 151 கோடி வசூல் செய்தது. தொடர்ந்து  4 நாட்களில் ரூ 404 கோடி வசூல் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டது. முதல் வாரத்தைக் காட்டிலும் படத்திற்கு இரண்டாவது வாரத்தில் மக்களிடையே வரவேற்பு குறைந்துள்ளது என்றும் இதனால் வசூலில் கூலி பின்னடைவை சந்தித்து வருவதாகவும் சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளன.