பஸ் கண்டெக்டராக இருந்தபோது பீஷ்மராக ரஜினி நடித்த சீக்ரெட் ஸ்டோரியை கூறியுள்ளார் நடிகர் மாரிமுத்து. 


பாரதிராஜா, ராஜ்கிரண், வசந்த், மணிரத்னம், சீமான், SJ சூர்யா உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த மாரிமுத்து யுத்தம் செய் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானர். தொடர்ந்து பல திரைபபங்களில் குணச்சித்திர நடிகராக வலம் வந்த மாரிமுத்து, ரஜினியின் ஜெய்லர், இந்தியன் -2 படங்களில் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.  இந்த நிலையில் சினிமாவில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து பேசிய் மாரிமுத்து, வடிவேல் மற்றும் ரஜினி குறித்த சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். 




ஆரம்பத்தில் உதவி இயக்குனராக இருந்ததில் தற்போது நடிகராக மாறினாலும் சினிமாவின் மீது இருக்கும் காதல் குறையவில்லை என்ற மாரிமுத்து, தான் தனது இயக்கத்தில் உருவான முதல் படமான கண்ணும் கண்ணும் திரைபப்டத்தில் விஜயக்குமார் எதிர்பாக்காத அளவுக்கு நடிப்பை வெளிப்படுத்தியதாக கூறினார். இறந்ததாக வரும் காட்சிகளில் பொம்மைகளை பயன்படுத்துவது வழக்கம். ஆனால், கண்ணும் கண்ணும் படத்தில், நெருப்பு மூட்டப்படும் சிதையில் விஜயக்குமார் இறந்த பிணமாக படுத்து இருந்தார். ஒரு மிகப்பெரிய நடிகர் எனது முதல் படத்தில் சிதையில் படுத்து நடித்தது எனக்கு சிலிர்ப்பை தந்தது என்றார். 


தொடர்ந்து வடிவேல் உடனான சினிமா அனுபவங்களை பகிர்ந்து கொண்ட மாரிமுத்து, ”நான் தான் வடிவேலு, வடிவேலு  தான் நான்” என்றார். ஏனெனில், என்னை போல பேசறியே, என்னோட ஆவி உன்மேல இறங்கிடுச்சான்னு வடிவேலு கேட்டாரு என்றார். இப்பவும் சிறந்த நடிகர் யாருன்னு கேட்டால் வடிவேலுவை தான் சொல்வேன் என்ற மாரிமுத்து, வடிவேலு காமெடி நடிகன் இல்லை, அவர் ஒரு காமெடி விஞ்ஞானி என்றார். சீமான் இயக்கத்தில் வெளிவந்த பாஞ்சாலங்குறிச்சி திரைப்படத்தில் வடிவேலு நடித்த உச்சக்கட்ட காமெடி சீன்களையும் நினைவு கூர்ந்தார். பாஞ்சாலக்குறிச்சியில் திரைப்படத்தில் மதுபோதையில் இருக்கும் வடிவேலு ஓலப்பாயை உருட்டும் ஒரு காட்சி இருக்கும். அது குறித்து பேசிய மாரிமுத்து, ” ஓலப்பாயை உருட்டும் அந்த சீன் எனக்கு என் அம்மா சொன்ன கதை. எங்க ஊர்ல ஒருத்தர் ஓலப்பாயை சுருட்டி பட்ட அவஸ்தையை என்கிட்ட அம்மா சொன்னாங்க. அதையே வடிவேலுக்கு காமெடி சீனாக செட் ஆகிடுச்சு” என்றார். 


ஜெய்லர் படத்தில் நடிக்கும் போது தன்னுடன் ரஜினி பேசியதாகவும், அதை நினைத்தால் இப்போதும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார். ரஜினி தன்னிடம், அவரது தனிப்பட்ட வாழ்க்கை, நடிகராக வேண்டுமென ஆசை ஏற்பட இருந்த காரணம் என எல்லாத்தையும் பகிர்ந்து கொண்டதாக குறிப்பிட்டார். உதாரணமாக, ”சினிமாவில் நடிப்பதற்கு முன்பு பெங்களூருவில் கண்டெக்டராக ரஜினி இருந்த போது ஒரு நாடகம் போடப்பட்டது. அதில், பீஷ்மர் கேரக்டரில் நடிக்க யாரும் இல்லாததால் நஜினி நடித்தார். வழக்கமான தனது வேகமான நடையில் நடந்து வந்து ரஜினி பீஷ்மராக அமர்ந்து சிரித்ததை அங்கிருந்த அனைவரும் ரசித்தனர்” இதை படப்பிடிப்பின் போது ரஜினியே என்னிடம் கூறினார் என்றார் மாரிமுத்து. அதேபோல், கண்டெக்டராக இருந்த போது பயணிகளுக்கு வேகமாக டிக்கெட் கொடுத்து விட்டு சென்றிடுவேன் என ரஜினியே தன்னிடம் கூறியதாகவும் மாரிமுத்து தெரிவித்தார்.