தான் வேலை பார்த்த தன் மீது திருட்டுப் பழி சுமத்தப்பட்ட சம்பவத்தை நடிகர் மணிகண்டன் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். 

Continues below advertisement

மக்களிடம் பரீட்சையமான மணிகண்டன்

உதவி இயக்குநராக இருந்து மிமிக்ரி கலைஞர், உதவி இயக்குநர், வசனம் எழுதுபவர், நடிகர் என பன்முகம் கொண்ட மணிகண்டன், தற்போது பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். ஜெய்பீம், குட் நைட், லவ்வர், குடும்பஸ்தன் என அடுத்தடுத்து வெற்றி படங்களில் நடித்த மணிகண்டன் தற்போது மக்கள் காவலன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் டிசம்பர் 4ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அவர் நேர்காணல் ஒன்றில் பங்கேற்றார். அப்போது தன் வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத சம்பவம் ஒன்றை பகிர்ந்தார். 

அலுவலகத்தில் திருட்டுப் பழி

அதாவது, “நான் ஓரிடத்தில் வேலை செய்தேன். வேலைக்கு சேர்ந்த நாளில் இருந்தே கோளாறாக இருந்தது. அப்போது கூகுள் மேப் எதுவும் இல்லை. அதனால் அந்த ஆபீஸில் இருந்த நபரை தொடர்புக் கொண்டு பேசி வழி கேட்டேன். உள்ளே சிக்னல் கிடைக்கவில்லை என அவர் வெளியே வந்தார். அந்த அலுவலக கதவு தானாக மூடிக்கொள்ளும். அதனால் லாக் ஆகி விட்டது. இப்போது உள்ளே இருப்பவர்களால் வெளியேயும், வெளியே நிற்கும் எங்களால் உள்ளேயும் செல்ல முடியவில்லை. எல்லாரும் இந்த பையனுக்கு கெட்ட நேரம் போல என்னை சொன்னார்கள். அன்று அந்த கதவை உடைக்க வேண்டியதாகி விட்டது. 

Continues below advertisement

ஒரு வாரம் சென்றிருக்கும். அந்த அலுவலகத்தில் வேலை பார்த்த நபரின் மோதிரம் காணாமல் போய் விட்டது. அவர் வேறு யாரிடமும் எதுவும் கேட்கவும் இல்லை, தேடவும் இல்லை. நேரடியாக என்னிடம் வந்து எடுத்திருந்தால் மோதிரத்தை கொடுத்து விடு என சொன்னார். எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. என் பேக் இங்கதான் இருக்கிறது. நானும் இருக்கிறேன். தேடிப் பாருங்கள், மோதிரம் கிடைத்தால் வேலையை விட்டு சென்று விடுகிறேன் என கோபத்தில் சொல்லி விட்டேன். அந்த மோதிரம் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. 

என்னை கிளம்ப சொன்னார்கள். நான் இங்கேயே தான் இருப்பேன். அதெல்லாம் முடியாது என பிடிவாதமாக இருக்க, மற்றவர்கள் பேசி என்னை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். 3 நாட்கள் கழித்து அந்த நபர் என்னிடம் வந்து மோதிரம் அலுவலகத்தில் கிடந்ததை சொல்லி, என்னிடம் மன்னிப்பும் கேட்டார். யார் வேண்டுமானாலும் சந்தேகம் வருவது தவறில்லை. ஆனால் நேரடியாக என்னைப் பார்த்து எடுத்தியா என கேட்டது தான் கஷ்டமாகி விட்டது” என மணிகண்டன் தெரிவித்தார். இதனைக் கேட்ட ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.