மேலும் அறிய

"எனக்கு தூக்கமே வரல.." பதற்றத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் மணிகண்டன்! எதற்காக தெரியுமா?

குட் நைட் படத்தின் வெளியீட்டின்போது தனது மனநிலை எப்படி இருந்தது? என்பது குறித்து நடிகர் மணிகண்டன் மனம் திறந்து பேசியுள்ளார்.

தமிழ் திரையுலகின் மிகவும் தவிர்க்க முடியாத நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் மணிகண்டன். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது அனுபவங்கள் குறித்து மனம் திறந்து பேசினார்.

அப்போது, குட் நைட் படம் வெளியானபோது பற்றிய அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அப்போது, அவர் பேசியதாவது, 

குட் நைட் முதல் நாள் முதல் காட்சி:

குட் நைட் படம் திரையரங்கில் வருகிறது. முதல் நாள் முதல் காட்சி. காலை 9 மணி காட்சி. போரூரில் ஒரு திரையரங்கிற்கு செல்கிறேன். எனக்கு இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை. இப்படி ஒரு படம் வருகிறது. ஜெய்பீம் படத்தில் நடித்ததால் நம்மை சிலருக்குத் தெரியும்.

நாம் கதாநாயகனாக தனித்து நடித்துள்ள படத்தைப் பார்ப்பதற்கு ஆட்கள் வருவார்களா? என்ற பயம் எனக்கு இருந்தது. அவர்கள் குறிப்பிட்ட சதவீதத்திலான ஆட்கள் வரவில்லை என்றால், காட்சியை ரத்து செய்துவிடுவேன் என்கிறார்கள். இரவு முழுவதும் எனக்கு தூக்கமே வரவில்லை. ரசிகர்கள் வராமல் காட்சியை ரத்து செய்துவிட்டால் என்ன செய்வது?

பயம்:

அதனால் எனக்கு செம பயம். சரியாக அந்த காட்சி நேரத்திற்குச் செல்கிறேன். பார்க்கிங்கில் யாருமே இல்லை. ஒரு பைக் கூட இல்லை. கண் எல்லாம் கலங்கிவிட்டது. காட்சி எல்லாம் ரத்து செய்துவிடுவார்கள் என்று கருதினேன். திரையரங்க உரிமையாளர் என்னை மேலே அழைத்து தேநீர் அருந்த சொன்னார். எனக்கு கவனமே இல்லை. தேநீர் குடித்துக் கொண்டே இருக்கும்போது என்னிடம் சொன்னார் என்னாச்சு?

ரத்து செய்துவிடுவார்களோ?

என் மனம் ரசிகர்கள் வரவில்லை என்றால் இந்த காட்சியை ரத்து செய்துவிடுவார்களோ? என்றுதான் ஓடிக்கொண்டிருக்கிறது. அவர் ஜெய்பீம் பார்த்தேன் சார். நன்றாக இருந்தது என்றார். ஆனால், என் மனம் அதில் இல்லவே இல்லை. அதன்பின்பு, கொஞ்சம் கொஞ்சமாக ஹார்ன் சத்தம் கேட்டது. என் மனதில் இங்கதான் வர்றாங்களா? என்று தோன்றியது. எட்டிப் பார்க்கலாம் என்று தோன்றியது. ஆனால், அவர் பேசிக் கொண்டு இருப்பதால் மரியாதையாக இருக்காது.

நம்பிக்கை வந்தது:

கீழே போலாம் என்று அவர் கூறியதும் எனக்கு கை நடுங்குகிறது. ஓடிச்சென்று பார்த்தால் பார்க்கிங்கில் அவ்வளவு பைக். எனக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. திரையரங்கு உள்ளே சென்று பார்த்தால் உள்ளே இருக்கைகள் முழுவதும் அனைவரும் உட்கார்ந்து உள்ளனர். அப்பாடா என்று இருந்தது. தயாரிப்பாளரிடம்கூட உங்கள் சொந்தக்காரர்களிடம் டிக்கெட் வழங்கிவிட்டீர்களா? என்று கேட்டேன். அவர் நான் ஏன்யா? கொடுக்கிறேன் என்றார்.

நிஜமாகவே பொது ரசிகர்கள்தானா? நம்மைப் பார்க்க வருவார்களா? என்று ஆச்சரியமாக இருந்தது. அப்போதுதான் நம்மை ஏற்றுக்கொள்வார்கள். நம் படம் பார்க்க வருவார்கள் என்று நம்பிக்கை வந்தது.

இவ்வாறு அவர் பேசினார்.

பீட்சா 2 படத்தில் சிறிய வேடத்தில் அறிமுகமான மணிகண்டன் இந்தியா - பாகிஸ்தான் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார். பின்னர், இன்று நேற்று நாளை, காதலும் கடந்து போகும், 8 தோட்டாக்கள் படத்தில் நடித்த இவருக்கு விக்ரம் வேதாவில் முக்கிய கதாபாத்திரம் வழங்கப்பட்டது. பின்னர், காலா படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்திருந்தார்.

ஜெய்பீம் படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை உண்டாக்கியது. இதையடுத்து, இவர் நடித்த குட் நைட் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. லவ்வர், குடும்பஸ்தன் என அடுத்தடுத்து மிகப்பெரிய வெற்றிப்படங்களை அளித்துள்ளார். தற்போது காவல்துறை அதிகாரியாக மக்கள் காவலன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Suriya: இங்க நம்ம சீன்தான்.. ஒரே வருஷத்துல 3வது சூர்யா படம் ரிலீஸ்! எத்தனை வருஷம் கழிச்சு தெரியுமா?
Suriya: இங்க நம்ம சீன்தான்.. ஒரே வருஷத்துல 3வது சூர்யா படம் ரிலீஸ்! எத்தனை வருஷம் கழிச்சு தெரியுமா?
Karthigai Deepam: ட்ரோனில் பறந்த இதயம்.. உண்மையை உடைத்த மயில்வாகனம்! மீண்டும் சோகத்தில் சாமுண்டீஸ்வரி குடும்பம்!
Karthigai Deepam: ட்ரோனில் பறந்த இதயம்.. உண்மையை உடைத்த மயில்வாகனம்! மீண்டும் சோகத்தில் சாமுண்டீஸ்வரி குடும்பம்!
மணிரத்னம் இயக்கத்தில் இணைந்து நடிக்கும் சூர்யா - தனுஷ் ?
மணிரத்னம் இயக்கத்தில் இணைந்து நடிக்கும் சூர்யா - தனுஷ் ?
3 முறை ரிஜெக்ட் செய்த நஸ்ரியா..ரோலக்ஸ் படம் எப்போ...ஹைதராபாதில் சூர்யா பேச்சு
3 முறை ரிஜெக்ட் செய்த நஸ்ரியா..ரோலக்ஸ் படம் எப்போ...ஹைதராபாதில் சூர்யா பேச்சு
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ration Shop: சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கும் ரேஷன் கடை ஊழியர்கள்! தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!
Ration Shop: சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கும் ரேஷன் கடை ஊழியர்கள்! தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!
Karthigai Deepam: ட்ரோனில் பறந்த இதயம்.. உண்மையை உடைத்த மயில்வாகனம்! மீண்டும் சோகத்தில் சாமுண்டீஸ்வரி குடும்பம்!
Karthigai Deepam: ட்ரோனில் பறந்த இதயம்.. உண்மையை உடைத்த மயில்வாகனம்! மீண்டும் சோகத்தில் சாமுண்டீஸ்வரி குடும்பம்!
Gold Rate Today: தீபாவளிக்கு முன் அதிர்ச்சி! மீண்டும் ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை..! வெள்ளி நிலவரம் என்ன?
Gold Rate Today: தீபாவளிக்கு முன் அதிர்ச்சி! மீண்டும் ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை..! வெள்ளி நிலவரம் என்ன?
School Leave: இடைவிடாமல் வெளுத்து வாங்கும் கனமழை.! பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு.!
School Leave: இடைவிடாமல் வெளுத்து வாங்கும் கனமழை.! பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு.!
IND vs NZ: கோலி - ரோகித் இஸ் பேக்! நாளை தொடங்குது முதல் ஒருநாள் போட்டி! பவுலிங்கில் கம்பேக் தருமா இந்தியா?
IND vs NZ: கோலி - ரோகித் இஸ் பேக்! நாளை தொடங்குது முதல் ஒருநாள் போட்டி! பவுலிங்கில் கம்பேக் தருமா இந்தியா?
Cyclone Murasu: கோரத்தாண்டவம் ஆடிய முரசு புயல்.. 120 கி.மீ. வேகத்தில் காற்று.. தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!
Cyclone Murasu: கோரத்தாண்டவம் ஆடிய முரசு புயல்.. 120 கி.மீ. வேகத்தில் காற்று.. தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!
Diwali Bonus: தீபாவளி போனஸ் அறிவிப்பு! யார் யாருக்கு எவ்வளவு? குஷியில் ஊழியர்கள்!
Diwali Bonus: தீபாவளி போனஸ் அறிவிப்பு! யார் யாருக்கு எவ்வளவு? குஷியில் ஊழியர்கள்!
ஆறே நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த Royal Enfield Hypershift Classic 650 பைக்! அப்படி என்னயா இருக்கு?
ஆறே நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த Royal Enfield Hypershift Classic 650 பைக்! அப்படி என்னயா இருக்கு?
Embed widget