ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஓம் திரைப்படம் நவம்பர் 20 ஆம் தேதி ரிலீஸூக்கு தயாராகி வருகிறது. மம்மூட்டி , சாய் பல்லை , ஶ்ரீலீலா , நஸ்ருத்தீன் ஷா உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஓம் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவன் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் மம்மூட்டியின் பேச்சு ரசிகர்களிடையே கவனமீர்த்துள்ளது

Continues below advertisement

தனுஷைப் பார்த்து பொறாமை பட்டேன்

எல்லாருக்கும் வணக்கம். ஆறு ஏழு வருஷம் கழித்துதான் தமிழ் படத்தில் நடிக்கிறேன். இதற்கிடையில் யாரும் என்ன நல்ல கதாபாத்திரம் கொடுக்கவில்லை. நிறைய பேரிடம் கேட்டிருக்கிறேன். யாரும் கண்டுக்கவில்லை. எப்படியோ இந்த இயக்குநர் என்னிடம் கேட்டபோது எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லாமல் இருந்தது. கொஞ்சம் காத்திருக்க சொன்னேன். அவரும் காத்திருந்ததால் தான் இந்த படம் நடந்தது. என்னைப் பொறுத்தவரை இது எனக்கு ஒரு மெமரேபல் படம். என்னைப் பொறுத்தவரைக்கும் நான் ரஜினி சாருடன் நடித்தேன். இப்போது தனுஷ் உடன் நடித்திருக்கிறேன். அவர் பக்கத்தில் அவர் மகன் இருக்கிறார். அவருடன் எப்போது நடிக்கப் போகிறான்  என்று தெரியவில்லை. இந்த படத்தில் மூன்று நான்கு ஹீரோக்கள் இருக்கிறார்கள். முதல் ஹீரோ இந்த படத்தின் கதை தான். இரண்டாவது ஹீரோ தனுஷ் சார் தான். மூன்றாவது ஹீரோ சாய் பல்லவி மேடம் தான் . இந்த படத்தில் இப்படி மூன்று வெவ்வேறு கதைகள் இருக்கின்றன. மலைவாழ் மக்களின் கதை ஒருப்பக்கம். சாய் பல்லவியின் குடும்ப கதை ஒருபக்கம். தனுஷ் ஒரு கையாள் அவருடைய கதை ஒருப்பக்கம். மீதிக் கதையை நீங்கள் படம் பார்த்துதான் தெரிந்துகொள்ள வேண்டும்

இதெல்லாம் ஒரு கதாபாத்திரமா

இந்த படத்திற்கு எனக்கு 40- 45 நாள் தான் ஷூட் என்று சொன்னார்கள். ஆனால் 6 மாசம் ஆகிவிட்டது படம் முடிவதற்கு. எனக்கு சென்னையில் வீடு இருந்தது என்பதால் தினமும் படப்பிடிப்பிற்கு போய் வந்தேன். கடைசி ஷாட் வரையும் இரவு 3 மணி வரை நடித்துவிட்டு வந்தேன். கேட்டால் கடத்தால் காரன் கதை நைட்ல தான் நடக்கும் என்கிறார் இயக்குநர். இந்த படத்தில் இருப்பவர்கள் எல்லாரும் பெரிய பெரிய நடிகர்கள். அவருடன் நடிக்கும்போது எனக்கு ஏதாவது கற்றுக்கொள்ள முடியும் என்று நினைத்தேன். எனக்கு இந்த படத்தில் தனுஷின் கதாபாத்திரம் ரொம்ப பிடித்த கதாபாத்திரம். கொஞ்சம் பொறாமையாக இருந்தாலும் அவர் அந்த கதாபாத்திரத்தை எப்படி கையாளப் போகிறார் என்பதை கவனித்துக் கொண்டே இருந்தேன். ஆனால் அவர் என் எதிர்பார்ப்பை மீறிவிட்டார். எனக்கு தெரிந்து தனுஷ் நடித்ததில் இது அவருடைய சிறந்த படம். 

Continues below advertisement

இந்த படத்தில் எனக்கு காலையில் இருந்து என்னுடைய அடியாட்களாக நடித்த கணேசா தண்டியப்பா என்று கூப்பிட்டுக் கொண்டிருப்பது தான் என் வேலையே. வேற பெரிய டயலாக் எதுவும் கிடையாது. திரு வாடா இங்க போடா இங்க . அவர அடிச்சிட்டு வாடா , இவர அடிச்சிட்டு வாடா என்று சொல்வது தான் எனக்கு வேலை. இந்த 6 மாதமா இதுதான் பண்ணிட்டு இருந்தேன். இதெல்லாம் ஒரு ரோலா . இதெல்லாம் ஒரு கதாபாத்திரமா. இதை நான் காமெடியாக சொல்கிறேன். ஆனால் படம் ரொம்ப சீரியஸ். நமக்கு தெரிந்த ஒரு விஷயத்தை ஒரு படமாக எடுத்திருக்கிறார். ஒரு நிஜ கதையை படமாக பார்க்கும் போது அது இன்னும் நமக்கு நெருக்கமாக இருக்கும். சந்தோஷம். " என்று மம்மூட்டி பேசினார்.