தங்கும் விடுதியாக மாறிய நடிகர் மம்மூட்டியின் சொந்த வீடு..அடியாத்தி ஒரு நாளுக்கு இவ்வளவா!
கொச்சி பனம்பிள்ளியில் நடிகர் மம்மூட்டிக்கு சொந்தமான வீட்டில் ரசிகர்கள் மற்றும் சுற்றூலா பயணிகள் தங்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மம்மூட்டி. இவர் தற்போது கேரளா கொச்சியில் பனம்பிள்ளி நகரில் வசித்து வருகிறார். ரசிகர்கள் அடிக்கடி அவரது வீட்டின் முன் நின்று புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிடுவது வழக்கம். தற்போது இந்த வீட்டில் ரசிகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கான முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டுள்ளன.
மம்மூட்டி வீட்டில் தங்கலாம்
விகேஷன் எக்பிரீயன்ஸ் என்கிற நிறுவனத்துடன் சேர்ந்து மம்மூட்டி இந்த முன்னெடுப்பை எடுத்துள்ளார். ரசிகர்கள் மற்றும் பயணிகள் மம்மூட்டியின் வீட்டில் கட்டணம் செலுத்தி தங்கிக் கொள்ளலாம். இந்த வீட்டின் ஒவ்வொரு இடமும் மம்மூட்டி மற்றும் அவரது குடும்பத்தினரின் மேற்பார்வையில் கட்டமைப்பட்டது. ஒரு நாள் இந்த வீட்டில் தங்குவதற்கு 75,000 கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. தற்போது செல்ஃபோன் வழியாக மட்டுமே புக்கிங் நடைபெற்று வருகின்றன. மம்மூட்டியின் வீட்டில் ரசிகர்கள் ஆசைப்பட்டாலும் இதற்கான தொகை என்பது பலருக்கு பெரிய ஷாக் கொடுத்துள்ளது. வாசலில் நின்று ஃபோட்டு எடுத்துக் கொள்வதே தங்களுக்கு போதும் என சில ரசிகர்கள் தெரிவித்துள்ளார்கள்