கோலிவுட்டில் கடந்த 2000 வது வருடம் வெளியான அலைபாயுதே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு எண்ட்ரி கொடுத்தவர் நடிகர் மாதவன். முதல் படத்திலேயே எக்கச்சக்க பெண் ரசிகர்கள் இவருக்கு. அதன் பிறகு தொடர்ச்சியாக காதல் திரைப்படங்களில் நடித்து வந்த மாதவன், தென்னிந்திய சினிமாவின் சாக்லெட் பாய் என கொண்டாடப்பட்டார். ஆனால் தனக்கும் இப்படியான பெயர் பிடிக்காது, நான் ஒரு வெர்சடைல் நடிகராக இருக்க வேண்டும் என்றுதான் விரும்பினேன் என சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருந்தார் மாதவன். ஆனாலும் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளர்கள் சாக்லெட் பாய் என அறிமுகப்படுத்தி , சானியாமிர்சாவிடம் பேசிக்கொண்டிருந்தீர்களே! காதலிப்பது எப்படி என டிப்ஸ் சொல்லுங்கள் என கேட்டதும் தயங்காமல் சில டிப்ஸ்களை கொடுத்து, ரசிகர்களின் ஆராவாரத்தை பெற்றார்.
அதில் "நான் சானியமிர்சாவிற்கு வணக்கம்தான் சொல்லிக்கொடுத்தேன். நான் நடிக்க வருவதற்கு முன்னதாக ஒரு ஆசிரியர் . அதுனாலதான் அந்த பழக்கம் போகல. சைட் அடிக்க 3 ரூல் இருக்கு. முதல் ரூல் , ஒரு பொண்ண பிடிச்சு போச்சுன்னா விடாம சுத்துங்க. சைட் அடிங்க . மரியாதையா அவங்கள ட்ரீட் பண்ணுங்க, இரண்டாவது பிறந்தநாள் , காதலர் தினம் அந்த மாதிரி நாட்கள்ல கிஃப்ட் கொடுங்க. கிஃப்ட் கொடுக்க காசு இல்லையா, காதலுக்கு காசு வேண்டாம் மனசு போதும். மூன்றாவது அவங்க காதல் இல்லைனு சொல்லிட்டாங்கன்னா வேற பொண்ண தேடி போயிட்டே இருங்க.” என்றார் மாதவன்.
மாதவன் தனது மாணவியான சரிதாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிகளுக்கு வேதாந்த் என்னும் டீன் - ஏஜ் மகன் உள்ளார். அவர் நீச்சல் போட்டிகளில் அசத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ் படங்களில் அவ்வபோது தலைக்காட்டி வரும் மாதவன் தற்போது அதீத இந்தி படங்களில் நடித்து வருகிறார். இயக்கத்திலும் கவனம் செலுத்தி வருகிறார் என்பது கூடுதல் தகவல் .