லோகேஷ் கனகராஜ்
மாநாகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தனக்கேன் ஒரு தனி கதை சாம்ராஜியத்தையே உருவாக்கியிருக்கிறார். தற்போது ரஜினியின் கூலி படத்தை இயக்கி வருகிறார் லோக்கி. இப்படத்தைத் தொடர்ந்து ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் கைதி 2 படத்தை அவர் இயக்க இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் உருவாக்கிய லோகேஷ் சினிமேட்டிக் யுனிவர்ஸில் நடித்த அத்தனை நடிகர்களையும் வைத்து ஒரு படத்தை இயக்கவிருப்பதாக லோகேஷ் தெரிவித்துள்ளார். இதன்படி கார்த்தி , கமல் , சூர்யா , ஃபகத் ஃபாசில் , விஜய் சேதுபதி உள்ளிட்ட அனைவரும் கைதி 2 படத்தில் நடிப்பார்கள் என எதிர்பார்க்கலாம். தற்போது கூலி படத்தின் ப்ரோமோஷன் வேலைகளை தொடங்கியுள்ள லோகேஷ் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். இதில் திரைப்பட இயக்குநர் ராஜமெளலி குறித்து அவர் பேசியுள்ளது கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ராஜமெளலியை தாக்கினாரா லோகேஷ் கனகராஜ்
" ஒரு படம் எடுப்பதற்கு முன் படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. அது கூடுதல் அழுத்தத்தையே கொடுக்கிறது. அந்த வகையில் கூலி திரைப்படம் முழுக்க முழுக்க என்னுடைய சுதந்திரத்தை முதன்மையாக வைத்தே எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதியை நானே சொல்வேன் என தயாரிப்பு நிறுவனத்திடம் முன்பே சொல்லிவிட்டேன். அதே போல் ஆர்.ஆர் ஆர் படம் போல் ஒரு படத்திற்காக நடிகர்களை 3 ஆண்டுகள் பிடித்து வைத்திருப்பதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. 6 முதல் 8 மாதங்களில் படப்பிடிப்பு முடிக்க வேண்டும் என்பது தான் என் நோக்கம். இதன் இடைப்பட்ட காலத்தில் படத்தில் நடிக்கும் அனைத்து நடிகர்களும் வேறு படங்களுக்காக கெட் அப் மாற்றாமல் இருக்க வேண்டும் என்று சொல்லமாட்டேன் அதையும் மீறி நடிகர்களுக்கு மற்ற பட வேலைகள் எப்படியாவது வந்துகொண்டுதான் இருக்கும். அதை நாம் தவிர்க்கவே முடியாது " என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்
ஆர்.ஆர்.ஆர் படம் பற்றி லோகெஷ் கனகராஜ் கூறிய கருத்து ராஜமெளலியை விமர்சிக்கும் விதமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்ஸ் கூறி வருகிறார்கள்.