கிங் காங் சங்கர்
தமிழ் திரையுலகில் பல வருடமாக நகைச்சுவை நடிகராக பயணித்து வருகிறார் நடிகர் கிங் காங் சங்கர். ரஜினிகாந்த் நடித்து வெளியான அதிசய பிறவி படத்தில் நடிகராக அறிமுகமானார். இந்த படத்தில் இவர் பிரேக் டான்ஸ் ஆடும் காட்சி ரசிகர்களை கவர்ந்தது. தமிழ், கன்னடம் , மலையாளம் ஆகிய மொழிகளில் இதுவரை 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகர் வடிவேலுவுடன் இவர் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் எல்லா காலத்தின் ரசிகர்களையும் கவர்ந்திருக்கின்றன. எத்தனை படங்களில் நடித்தாலும் கிங் காங் சங்கர் என்றாலே ரசிகர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது அதிசய பிறவி படத்தில் அவர் ஆடிய பிரேக் டான்ஸ் தான்
சமீப காலங்களில் தனது எக்ஸ் பக்கத்தில் விக ஆக்டிவாக இருந்து வருகிறார் கிங் காங் சங்கர். அவரிடம் ரசிகர்கள் அதே பிரேக் டான்ஸ் ஆடி வீடியோ வெளியிடும்படி கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்று அதிசய பிறவி படத்தின் பிரேக் டான்ஸ் காட்சியை ரிகிரியேட் செய்து வெளியிட்டுள்ளார் கிங் காங் சங்கர். அன்று அந்த படத்தில் ஆடியதில் கொஞ்சம் கூட மாற்றமே இல்லாமல் அப்படியே அவர் ஆடியுள்ளது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது