நடிகர் கார்த்தி நடித்துள்ள சர்தார் படம் ஹிட்டாக என்ன காரணம் என்பது தொடர்பான ட்வீட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகம் முழுவதும் வரும் அக்டோபர் 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை என்றாலே புத்தாடை, பட்டாசு கொண்டாட்டங்களோடு அந்த தினத்தில் ரிலீசாகும் புதுப்படங்களும் அதிக கவனம் பெறும். அந்த வகையில் இந்த தீபாவளிக்கு இரண்டு புதிய படங்கள் ரிலீசாகியுள்ளது. ஒன்று சிவகார்த்திகேயன் நடித்த ப்ரின்ஸ், மற்றொன்று கார்த்தி நடித்த சர்தார்.இவ்விரு படங்களும் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள சர்தார் படத்தில் ஹீரோயினாக ராஷி கண்ணா நடிக்க லைலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ரெஜிஷா விஜயன், முனீஷ்காந்த், அவினாஷ், மாஸ்டர் ரித்விக், யூகி சேது, முரளி சர்மா, வில்லனாக மிரட்ட பாலிவுட் நடிகர் சங்கி பாண்டே ஆகியோரும் நடித்துள்ளனர். சர்தார் படத்தின் தமிழக திரையரங்க உரிமையை ரெட் ஜெயிண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
ஸ்பை த்ரில்லர் படமான சர்தார் தீபாவளி ரிலீஸில் வெற்றி பெற்றுள்ளதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்துள்ள நிலையில், ஒரு ட்வீட் ட்ரெண்டாகியுள்ளது. அதில் கார்த்தி நடித்த பருத்தி வீரன், சிறுத்தை, கைதி, சர்தார் ஆகிய படங்களின் போஸ்டர்கள் இடம் பெற்றுள்ளது. இந்த போஸ்டரில் அவர் கத்துவது போல காட்சி உள்ளது. இப்படி எந்த படமெல்லாம் எல்லாம் அவர் கத்துவது போஸ்டர் வெளியானதோ, அவை எல்லாம் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. அந்த வகையில் சர்தார் படத்தின் வெற்றிக்கும் இதுவும் காரணம் என சொல்லப்படுகிறது